சிலப்பதிகாரமும் ஆயர்கள் வாழ்வும்



சிலம்பு அதிகாரத்தில் ஆயர்கள் பற்றிய தொகுப்பு

 கண்ணகி கோவலன் இருவரும்  புகாரை நகரை விட்டு பாண்டிய நாட்டுக்கு வந்து சேர்ந்த பிறகு 
அங்கே ஐயை என்னும் காளி கோவிலில் கவுந்தி என்னும் அடிகாலாரிடம் தஞ்சம் அடைகிறார்கள்,

 அவர்களிடம் கண்ணகியே பாதுகாப்பாக ஒப்படைந்துவிட்டு மதுரை நகர் சென்று பார்வையிட்டு வந்துவிடுகிறான்,

அந்த நேரத்தில் தான் ஆயர்குல முதாட்டி மாதரி வருகிறால் அங்கே இருக்கு இயக்கி அம்மனை வணங்கி விட்டு  கவுந்தியையும் வணங்குகிறாள் ஆயர்குல முதாட்டி மாதரி,
 அப்போது கவுந்தி அடிகள் யோசித்து இவர்களை இம்மாதரியிடம் ஒப்படைக்கலாம் இவர்கள்  
பசுகளை காத்து அதில் இருந்து கிடைக்கும் பயன்களை மற்றவர்களுக்கு  குடுப்பவர்கள் கோவலர்கள் இவர்கள் வாழ்க்கையில் துன்பம் என்பதே வராது ஒன்று என்று தீர்மாணித்து 
இப்படிப்பட்ட வாழ்க்கை வாழும் மாதரி நல்ல குணம் உள்ளவன் யாருக்கும் தீங்கு செய்யாத ஆயர்குலத்தை சேர்ந்தவள் 
அதே போன்று  இறக்க குணமும் உடையவள் இவளுடன் இவர்களை அனுப்பலாம் என்று 
 அதில் ஒன்றும் தவறு இல்லை என்று 
மாதரி கேள் இவர்களை பாதுகாத்து வைப்பது உனது கடமை என்று இருவரையும் இடையர் குல மூதாட்டியகிய மாதரியிடம் ஒப்படைத்தார் கவுந்தி  கண்ணகி கோவலனை,  இவர்களை நீ நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வாயாக என்று கூறி அனுப்பினார்கள்,

 பிறகு ஆயர்கள் வாழும் இடத்திற்கு கண்ணகி கோவலன் ஆயர்குல முதாட்டி மாதரியுடன் வருகிறார்கள்,
அப்போது  கன்றுகளை பார்த்தை பசுக்கள் கனைத்துக்கொண்டுருந்தன, ஆய்பாடியில் சிலர் ஆட்டுக்குட்டிகளுடனிம் சிலர் ஆடுகளுக்கு இழைதளைகளுடனும் தொரட்டியுடனும் மாதரியே சூழ்ந்தனர்,
மாதரி தன் இல்லம் வந்தடைத்தாள்

கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி மகிழ்ச்சியில் திளைத்தாள். வெண்ணெய் விற்றுக் கொண்டுவந்த உணவை உண்பவர் இடையர் குல மக்கள். காடு சூழ்ந்த இருப்பிடம் அவர்கள் வாழுமிடம். வாழும் இல்லத்துக்குச் செம்மண் பூச்சு செய்து புதுப்பித்தாள். புதிதாகப் பந்தல் போட்டாள். பாதுகாப்பான இல்லத்தில் இருக்கச் செய்தாள். 
ஆய்ச்சியர் சிலர் கூடிக் கண்ணகியை நீராட்டினர். அரிய விலை உயர்ந்த ஆடகப் பொன்னாலான அணுகலன்களைக் கூடல் மகளிர் புனைந்துகொள்ளும் காலம் இது. நீயோ கோலம் செய்யாமல் வந்திருக்கிறாய். உனக்கு என் மகள் ஐயை இட்ட பணியைச் செய்யும் தோழியாக இருப்பாள். பொன்னைப் போல் உன்னைப் பாதுகாத்து வைத்திருப்பேன். என்னுடன் இருக்க வேண்டும் - என்று தொழுது வேண்டினாள். கண்ணகி மாதவம் செய்தவள். அவள் வழியில் பட்ட துன்பம் எல்லாம் நீங்கி இருக்க வேண்டிய இடத்தில் இருத்தினாள். உன் கணவர்க்கு ஏதாவது துன்பம் உண்டோ என வினவினாள். 
பிறகு சமையளுக்கு தேவையான. பொருட்களை கொண்டு வர செய்தாள் மாதரி,
பிறகு ஆய்ச்சியர்கள் 
தாங்கள் உண்ணும்
பாகற்காய், வெள்ளரிக்காய், மாதுளங்காய், மாம்பழம், வாழைப்பழம், சாலி என்னும் நெல்லரிசி, பால் இவற்றையும் ஏற்றுக் கொள்க என வேண்டிக் கண்ணகிக்குக் கொடுத்தாள், ஐயை
பிறகு தன்னோட மெல்லிய விரல்களால் கண்ணகி தன்னொட கணவனுக்கு தோழி ஐயையுடன் சமைத்தால், 
அதை காணம் போது
கண்ணகியும் கோவலனும் இருக்கும் அழகைப் பார்த்து ஐயையும் அவள் தாயும் வியந்தனர். 
இங்கு  அமுதம் உண்ணும் நம்பி அன்று ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்த காயாம்பூ மேனி வண்ணனோ? 
அமுது படைக்கும் கண்ணகி, அன்று யமுனை ஆற்றில் கண்ணனின் துன்பம் தீர்த்த இராதையோ?
இது நமக்குக் கிடைத்த கண்கொள்ளாக் காட்சி என்று சொல்லிக்கொண்டு வியந்தனர்,

பிறகு கோவலன் உணவு உண்ட பிறகு கண்ணகி வெத்தழை மடித்து குடுத்தாள் அதையும் உண்டு விட்டு கண்ணகியிடம் விடை பெற்றான்  பாண்டிய நாட்டு வணிக நகரத்திக்கு   கண்ணகியே கோவலர்களை நம்பி விட்டு சென்றான் கோவலன், அவன் வீடு விட்டு கிழம்பும் போது காளை மாடு ஒன்று குத்த ஒடிவந்தது அதை கெட்ட சகுனமாக என்னவில்லை அவன்,
அதிகாலையில் பாண்டியன் கோவில் மணி ஒலித்தது அதே கேட்டது மாதரி தன்னோட மகள் ஐயையிடம் இன்று நெய் வழக்குவது நம்மோட முறை என்று கூறி  தயிர் கடைய கயிறும் தயிர் கடையும் மத்தும் எடுத்தக்கொண்டு வர சொன்னால்,
 ஆனால்  பிறை ஊற்றி வைத்துருந்த. குடத்தில் பால் உறையவில்லை,  உறியில் இருந்து வெண்ணெயும் உறுகவில்லை அன்று
காளை மாட்டின் கண்ணில் கண்ணீரும் வந்தது கன்று குட்டிகள் பசுவிடம் பால்குடுக்கவும் போகவில்லை பசுவின் காம்புகளும் நடுங்கின, பசுவில் இருந்த மணிகளும் அருந்து விழுந்தது,
இதை கண்டதும் எதோ கெட்ட சகுனம் என்று என்னினார்கள்

குடத்தில் பால் உறையாமை. 
காளை மாட்டின் கண்ணில் கண்ணீர் வடிதல், 
உறியில் வெண்ணெய் உருஉகாமை, 
கன்று பால் குடிக்காமல்
இவற்றைக் கண்டு வருவது ஓர் துன்பம் உண்டு என்று மனம் மயங்க வேண்டாம். 
மண்ணிலுள்ள பெண்களுக்கெல்லாம் அணிகலனாக விளங்கும் கண்ணகி காணுமாறு குரவை ஆடுவோம். 
ஆயர்பாடியில் அன்று எருமன்றத்தில் மாயவனுடன் அவன் அண்ணன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுவோம். 
கறவை, கன்று ஆகியவற்றின் துயரைக் களைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஆடுவோம் - என்று மாதரி தன் மகள் ஐயையிடம் கூறினாள். மாதரி,

அப்போது குரவையாடுவதற்கு ஏழு ஆயகுமாருகளை அழைத்து அவர்களுக்கான பெயர்களை கூறி  அவர்களுக்கான காளைகளையும் காட்டுனார்கள்
தேன்மலர் சூடிய இவள் காரிக் காளையை அடக்கியவனை விரும்புவாள். 
பொன்வளையல் அணிந்த இவள் தோள் நெற்றியில் செஞ்சுழி உடைய காளையை அடக்கியவனுக்கு உரியது. 
முல்லைப் பூ சூடிய இவள் கொழுத்த காளைமேல் ஏறி வருபவனுக்கு உரியவள். 
இந்தப் பெண்ணின் தோள் சின்னச் சின்ன புள்ளி கொண்ட வெள்ளைக் காளையை அடக்கியவனுக்கு உரியது. 
இந்த மென்முலையாள் பொன்னிறப் புள்ளி கொண்ட வெள்ளைக் காளையை அடக்கியவனுக்கு உரியவள். 
கொன்றைப் பூ சூடிய இவள் பலரை வெற்றி கண்ட கொழுத்த காளையை அடக்கியவனுக்கு உரியவள். 
காயாம்பூ அணிந்த இவள் தூய வெள்ளை நிறக் காளையை அடக்கியவனுக்கு உரியவள்.

இப்படி ஏழு பெண்களை நிறுத்தி, ஏழு காளைமாடுகளைச் சொல்லிக் காட்டி குரவை ஆடத் தொடங்கினாள்,

இவ்வாறு ஏழு பெண்களைக் குரவை ஆட நிறுத்தி, அவர்களை ஏறு தழுவக் காளை வளர்த்தவர்கள் என்று சொல்லி அந்த ஏழு பெண்களுக்கும் தான் படைத்த பெயர்களைச் சூட்டினாள். 
தன் மகளை இடப்பக்கம் நிறுத்தி, அவளிடமிருந்து தொடங்கிப் பெயர்களைச் சூட்டினாள்.  

குரல்,துத்தம்,கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் 
இவ்வேழு பெண்களின் பெயர்களும் ஏழு இசைகளின் பெயரிலே சூட்டப்பட்டுள்ளது,
 எழுவரையும் அழைத்து காளைகளின்   அடையாளத்தையும் காட்டி அதற்கான பெண்களையும் வரிசையில் நிறுத்தி 
அன்று  கோகுலத்தில்   அண்ணன் தம்பி தங்கை மூவரும் ஆடிய குரவை ஆட தயாராகினார்கள்,


  மாயனும் அவன் அண்ணனும் அன்று ஆயர்பாடியுல் ஆடிய குரவையை காட்டுகிறது,


   குரல் தன்னை மாயவன் என்றால், 
 இளி தன்னை வெள்ளை ஆயவன் என்றால்  பால் நிறத்வன் பலராமர், 
ஆய் மகள் பின்னையாம்  துத்ததை  நப்பினை பிராட்டி என்கிறாள்,
மற்றவர்கள் முறைப்படி  நின்றனர்  ஒருவர் பின் என்று 

மாயவன் என்ற குரல் பின்னாடி நப்பினையாக துத்தம் பின்னாடி தாரமும் நின்றனர், 
 பலதேவனாக  இளி நின்றாள் அவள் பின்னர் உழையும், விளரியும் நின்று, 
 துத்தம் இடபக்கம்  கைக்கிளையும்  நின்று முறைப்படி  எழுவர் நின்றனர்,
பின்பு நப்பினையாக துத்தம்  கண்ணன் ஆகிய  குரல் மீது  துளப மாலையை போட்டு குரவை ஆட தொடங்கினார்கள், 
அப்பொழுது ஒரு அடியால்  உலகத்தை   (வையகம்) அளந்தவன்  கண்ணன் அவனோட வலமார்பில்  இருக்கும் திருமகளை காணாதபடி  செய்தவள் நப்பினை  என்று சொல்லி ஆர்ப்பரித்தால் ஆய் மூதாட்டி  மாதரி 
அதை ஆம் என்றால் "ஐ ' மாதரி மகள்,

அந்த எழு பெண்களும் சரியான வட்டத்தில் நண்டுப் பிடி போல் கைகளைக் கோத்துக்கொண்டு சீராக ஆடத் தொடங்கினர். 

  முதலில் குரல்  என்று பெயரிடப்பட்ட பெண் தன் கிளை (உறவு முறையாள்) துத்தத்தை நோக்கி (மாயவன் தன் உறவு முறையாள் நப்பின்னையை நோக்கி, கொல்லையில் குருந்த மரத்தைச் சாய்த்தவன் சீரை முல்லைப் பண்ணால் பாடுவோம் என்றாள்.   
அவள் அவ்வாறு கூறியதும் 
குரல் நரம்பு மந்தமாக ஒலிப்பது போலவும், 
இளி நரம்பு சமமாக ஒலிப்பது போலவும், 
துத்தம் நரம்பு வலிமையாக ஒலிப்பது போலவும், 
விளரி நரம்பு மந்தமாக ஒலிப்பது போலவும் 

நட்பு நரம்புகள் (நரம்புகளின் பெயர் சூட்டப்பட்ட மகளிர்) பாடத் தொடங்கினார்கள்.
கன்றுக்குட்டி உருவில் தன்னைக்கொல்ல  வந்தவனை மரத்தில் காய்கனிகளை உதுர்த்தும் தொரட்டிய போல அக்கன்றை தூக்கி எறிந்து விளாம்பழத்தை உதிர்த்த மாயவன் இன்று நம் ஆனிரைகளைக் காக்க  வருவானாகில் அவன் ஊதும் கொன்றைக் காயால் செய்யப்பட்ட குழலின் இசையைக் கேட்கலாமே, தோழி!
என்றால் ஒரு பெண்

   வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாக்கிக் கொண்டு கடலைக் கடைந்த மாயவன் இன்று நம் ஆணிரைகளைக் காக்க வருவானே என்றால் அவன் ஊதும் ஆம்பல் கொடித் தண்டினால்  செய்த குழலின் இசையைக் கேட்கலாமே, தோழி!  என்றால் ஒருத்தி

  அன்று  குரந்த மரமாக நின்ற பகவர்களை ஒடித்த மாயவன் இன்று நம் ஆனிரைகளைக் காக்க வருவான் எனில் அவன் ஊதும் முல்லைப் பண்ணைக் கேட்கலாமே, தோழி! என்றால் மற்றி ஒரு பெண்,

யமுனை நதிகரையில் மாமன் மகளும் தன்னோட காதலியுமான நப்பினை பிராட்டி கூட கண்ணன் செய்த காதல் விளையாட்டை பாடுவோம்,






  யமுனைத் துறைவன் மாயவனோடு காதல் ஆட்டம் ஆடிய நப்பின்னையின் அழகினைப் பாடுவோம். 



என் மேனி அழகெல்லாம் வளைந்தாடும்படி என் ஆடைகளைக் கவர்ந்து சென்றானே, அவன் சாயல் முகம் கொண்டவள் நப்பின்னை என்று பாடுவோமா? 



யமுனை நீரில் நின்ற ஆய்ச்சியருக்கு வஞ்சம் செய்தானே அந்த மாயவனின் நெஞ்சத்தைக் கவர்ந்தாளே, நப்பின்னை, அவள் நிறைதான் நிறை என்று போற்றிப் பாடுவோமா? 



ஆடையையும், வளையலையும் இழந்து, நாணத்துடன் கைகளால் தன் கண்களைப் பொத்திக்கொண்டு ஒளிந்துகொண்டாளே. அவள் முகத்ததைக் கண்டு ஆசை கொண்டானே, அவன் அழகுதான் அழகு, என்று போற்றிப் பாடுவோமா?



என்று நப்பினை பிராட்டி கூட. கேசவன் செய்த காதல் லீலை பற்றி  சொல்கின்றது,

மாயவன் ஆகிய. குரலை இடப்பக்கம் நின்றார் 
வெள்ளையன் எனுகிற இளி வலப்பக்கம் நின்றான். 
துத்தம்  என்னும் நப்பின்னை ஆடுகிறாள். 
நாரதர் யாழ் இசைக்கிறார். 
குரவைக் கூத்து இப்படி நடைபெறுகிறது.
   மாயவனும் அவன் முன்னே அண்ணன் பலராமனும் பார்த்துக்கொண்டிருக்க, நப்பின்னையோடு சேர்ந்து சிறுமியர் கூந்தல் பின்புறம் அசைந்தாடக் குரவை ஆடுகின்றனர்.யசோதையார் தொழுவத்தில்  உள்ள பூக்கள் கொட்டிக் கிடக்கும் மன்றத்தில் இவர்கள் ஆடும் ஆட்டம் தகைமை சான்று விளங்கியது

பிறகு

குரவை ஆடும் பெண்கள் அனைவரும் மூவேந்தர் பற்றி பாடுவோம் என்று கூறி,

மூவேந்தர்கள் சேரசோழபாண்டியன்
மூவரும் கருடபறவை மீது அமர்ந்து செல்லும் கண்ணனை பற்றி பாடுவோம் என்று பாடுகிறார்கள்,

  கோக்காத சந்தன மாலையும், கோத்த முத்து மாலையும் தேவர் கோன் இந்திரன் மாலையையும் தென்னவன் தன் மார்பில் சூடிக்கொண்டான். அவனை, கோகுலத்தில் நிரே மேய்த்து குருந்த மரம்  சாய்த்து கோபியர் மானம் காத்தவன் கண்ணன் என்று சொல்கின்றனர். 

  புகார் அரசன் வளவன் இமயத்தில் தன் புலிச்சின்னத்தைப் பொறித்தான். அவனைச் சக்கரத்தை தன்னோட ஆயுதமாக வைத்து இருந்து மாயவனே  என்கின்றனர். 

   வஞ்சி அரசன் சேரன் கடலில் படையுடன் சென்று கடம்பர்களின் கடம்பு மரத்தை வெட்டினான். அவனைக்  நீரின் அதிபது கடைலை கடைந்து அமிர்தம் எடுத்து  ஆயவன் என்கின்றர்.


இவ்வாறு மூவேந்தர்கள் பற்றி பாடுகின்றன, மூவரும் கோகுல நந்தன் யாதோசையில் இளம் சிங்கம் கண்ணனின் வம்சத்தனர் என்று சொல்கிறார்,


மேரு மலை வைத்து, வாசுகி என்னும் பாம்பு  கயிராக்கு .  பால் கடலைக் கடைந்து அதன் வயிற்றைக் கலக்கினாயே. அத்தகைய உன் வலிமை அசோதை தயிர் கடையும் கயிற்றால் உன்னைக் கட்டி வைத்து அடித்தபோதும் கட்டுப்பட்டுக் கிடந்தாயே, அந்த மாயமே எங்களை வியப்படையச் செய்கிறது. 






இவன் ஏதுமற்ற பொருள் என்று தேவர்கள் உன்னைப் புகழ்கின்றனர். நீயோ பசி ஒன்றும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் உண்டுவிட்டாய். அது போதாதா  என்று ஆயர்பாடியில் உறியில் வெண்ணெய் திருடி உண்ட வாய் யாசோதேயில் ஒரு வாய் சோற்றுக்கு ஏங்கு உன் இந்த மாயம் எங்களை வியப்படையச் செய்கிறது. 



தேவர்கள் திருமால் என்று உன்னைப் புகழ்கின்றனர். நீ உன் இரண்டு தப்படிகளால் மூன்று உலகையும் அளந்து காட்டினாய். அப்படிப்பட்ட காலடிகள் பஞ்ச பாண்டவருக்குத் தூதாக நடந்து சென்று உன் இரு கால்கள் யாசோதையின் காட்களுக்கு இடையில் சிக்கிய  மாயம் எங்களுக்கு வியப்பாக உள்ளது.


மூன்று உலகங்களையும் இரண்டு அடிகால் அளந்த திருவடி தம்பி  இலட்சுமணனோடு காட்டுக்குச் சென்று இலங்கையில் அட்டுளியம் செய்யும் அரக்கனை அழித்தது  மக்களை காத்த அந்தச் சேவகன் புகழைக் கேட்காத காது இருந்து என்ன காது






 பாலதேவனே உலகை அளந்து மாயங்கள் செய்யும் மாயவனே

 உலகமாக விரிந்துள்ள தாமரை வயிற்றறை உடைய  விண்ணவனை; கண், அடி, கை, வாய் நான்கும் சிவந்திருப்பவனை, கரியவனை, காணாத கண் என்ன கண் 



தாய்மாமன் கம்சனை வதம் செய்து நான்கு திசையும் உன் புகழ் முழங்க செய்தவனே பாண்டவர்களுக்காக

தூதுவனாக நடந்தவனே
 உன் புகழை புகலாத நாக்கு என்ன நாக்கு?
மாதரி சொல்கிறாள். 

குரவை ஆட்டத்தில் கோத்துப் பாடிய தெய்வம் எங்கள் ஆனிரைகளைக் காக்க வேண்டும். 
வேந்தன் நாள்தோறும் பகைவரை அழித்து வெற்றியை விளைவிக்க வேண்டும். 
என வாழ்த்தினர். 
தன் வெற்றியை நிலைநாட்டத் தேவந்திரன் தலைமுடியில் தன் கை வளையலை உடைத்தவன் தென்னவன் முரசு அப்போது முழங்கிற்று.
இவ்வாறு குரவை அடிக்கொண்டு இருக்கும் போது ஆயர் மூதாட்டி  ஒருத்தி தள்ளாடிக்கொண்டு கையில் பூ, பூசை பொருட்கள்,சந்தணம், ஆகியவற்றை எடுத்திக்கொண்டு வைகை ஆற்றில் இருக்கும் திருமால் கோவிலுக்கு சென்று போது அங்கே கோவலன்  இறந்த செய்தி ஊரார் பேச கேட்கிறாள், உடனே விரைவாக வந்தாள் ஆய்பாடியிலும் குரவையாடுவது முடிவு பெற
அவள் வந்த கூற அங்கே சலசலப்பு ஏற்படுகிறது
கண்ணகிக்கோ மனது துன்பம் அடைகிறது,கலங்கும் துன்பம் பெருமூச்சாகவும் வருகிறது பிறகு கோவலன் இறந்த செய்தியும் அறியபடுகிறாள் கண்ணகி  கோவத்தில்  ஆயர்பாடியில் முழங்குகிறாள் எல்லாரும் கேளுங்கள் ஆய்ச்சியரே கேளுங்கள்  அனைத்தையுர் பார்க்கும் சூரியனே என் கணவன் கல்வனா என்று முழங்கிய போது உன் கணவன் கள்வன் இல்லை மதுரை எரியும் என்று குரல் ஒலித்தது,
ஆவேசத்துடன் தென்னவனை நோக்கி கண்ணகி சென்றால் தவறான தீர்ப்பு வழக்கியதால் தன்னோட செங்கோல் வளைந்தது அது பிறநாட்டு மன்னர்களுக்கு அறியும் முன்பே உயிர் துறந்தான் பாண்டியன்,
கண்ணகி மதுரை வீதியில் கண்ணீருடம் அழுதுபுலம்பி சாபம் இடுகிறாள் அப்போது  
கூடல் மதுராபதி என்ற பெண் தெய்வம் தோன்றி கண்ணகிக்கு கோவலன் பூர்வஜென்ம கதையே உரைக்கிறது,
கலிங்கநாட்டில் வாசு குமரன் என்று இருவர்கள் இரு நாடுகளே ஆண்டு வந்தார்கள்,
சிங்கபுரம்,கபிலபுரம் என்று
சிங்கபுரத்து கடைத்ருவில் சங்கமன் என்கிற வணிகன் தன் மனைவி நீலியுடன்  பொருட்கள் சேகரித்து அந்த வழியே சென்று கொண்டு இருந்தான் அப்பது இவன் சிங்கபுரத்து ஒற்றன் என்று பரதன் என்னும் இடையன்
 (  பரதன் என்னும் பெயரன்; அக் கோவலன்)
   கபிலபுரத்து அரசனிடம் கூறி கொலை செய்யப்பட்டான் அந்த சங்கமன்  அதன் பிறகு அவன் மனைவி நீலி  கபிலபுரத்து தெரிவில்  
இது அரசின் முறையோ பரதன் முறையோ ஊர் மக்கள் முறையோ என்று  கூறி புலம்பிக்கொண்டு சென்றால்  பிறகு ஏழாம் நாள்  நீலியின் கணவன் தேவன் தோற்றத்தில் வந்து இருவரும் மலையில் ஏரி கணவனுடன் மனைவி இணைந்தால், முப்பிறவியில் செய்த வினையே இப்பிறவியல் நிகழ்ந்தது,  பரதனால் கொலை செய்யப்பட்ட சங்கமனே இப்பொற்கொல்லன் இன்று முதல் பதிநான்காம் நாள் பாண்டியா நாட்டு எல்லையே கடந்த நீ உன் கணவனுடன் இணைவாய் என்று கூறி சென்றது,
அத்துடன் மதுரை வீதியில் அக்னி பகவானுக்கு மதுரை எரிய வேண்டும் என்று  கூறிவிட்டு சென்றாள் கண்ணகி  மதுரையில் உள்ள. ஆநிரைகள் அனைத்தும் இந்த செய்தி அறிந்தி குற்றம் இல்லாது ஆயர்பாடிக்கு சென்று தன் உயிரை காத்துக்கொண்டது, கண்ணகி மதுராகவி சொன்னது போல கோவலன் கூட கைகோர்த்தாள்,  அதை அறிந்து  குறவர்கள்
அன்று ஒரு நாள் தன் குலதெய்வமாகிய வள்ளி கூறி குரவையாடினார்கள் அப்போது கண்ணகியேயும் வணக்கினார்கள் விழாவின் போது அந்த மக்கமக சென்ற சேரனை கண்டு நடந்ததை கூறினார்கள் பெண் ஒருத்தி வாந்தால் ஒரு மார்புடன் வானத்தில் இருந்து அவள் கணவன் தேவன் போல வந்து அழைத்து சென்றுவிட்டான் என்று,
அப்போது சேர மன்னனிடம்  
மணிமேகலை காப்பியம் இயற்றிய சீத்தலைச் சாத்தனார் அந்த பெண்ணின் கதை நான் அறிவேன் என்று கூறினார் முழுவதையும் கூறினார்,
பிறகு கண்ணகிக்கு கோவில் கட்ட முடிவு எடுக்கிறான் சேரன் செங்குட்டுவன்  இமயத்தில் கல் எடுத்து   அதை காவிரியில் நனைத்து கோவில் எழுப்ப வேண்டும் என்று வடக்கே செல்கிறான் சேரன்
 இனி இங்கே நடப்பது,

மாடல மறையவன் என்கிற மறை ஓதுபவன்  சேரனை சந்தித்து பேசுகிறான் அப்போது பாண்டிய நாட்டின் நிலவரம் சோழ. நாட்டு நிலவரத்தை கூறுகிறான்,  அப்போது மன்னனிடம்,
மன்னா இன்னும் இருக்கிறது நான் மதுரை வழியில் வந்த போது அங்கே ஊர் மக்கள் பேசியது கேட்டேன்  பாண்டியனே கண்ணகி சிலம்பால் வீழ்த்தினால்  என்றும் கண்ணகி கோவலனுக்கு பாதுகாப்பு அழித்த இடையர் குல மூதாட்டி மாதரி  
தீ மூட்டி  அப்போது இடையர் குல மக்களே இதே கேளுங்கள்  கோவலன் களவன் இல்லை அரசன் தவறு செய்துவிட்டடான் ஆகையால் அடைக்கலம் வந்தவர்களே பாதுகாக்கமுடியாமல் போய் விட்டது என்று அத்தீயில் இறங்கி உயிரை விட்டாள் இடையர்குல மூதாட்டி என்று கூறினார்  மாடல மறையவன்,

உறவுகளுக்கு வணக்கம் இது ஆயர்கள் பற்றி எழுதுவதாள்
கதையே சுருக்கி ஆயர்கள் பற்றியது மட்டுமே எழுதப்பட்டுள்ளது,

Comments