சேது சீமை இடையர்கள்

சேது சீமை இடையர்கள்
 கி.பி 16-19
சேது சீமை இடையர்கள் இவர்கள் தொன்மையான குடிகளில் ஒன்று இவர்கள் சேது சீமையின் கடற்கரை அல்லாத பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் மூன்று வகையான பிரிவுகள் உள்ளன
1.நாட்டு இடையர்
2 வலசை இடையர்3 சிவியர் இடையர்

சிவியர் இடையர்:
இவர்கள் கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் பல்லக்கு தூக்குவதில் கெட்டிக்காரர்கள்.கோயில்களில் பல்லக்கு தூக்குவதில் உரிமையுடையவர்கள் .மற்ற இடையர்கள் இவர்களுடன் எந்த ஒரு கொள்வினை மற்றும் கொடுப்பினை வைத்து கொள்வது கிடையாது காரணம் இவர்கள் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கம் உடையவர்கள் மற்ற இடையர்கள் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள்.இவர்கள் சேது சீமையின்  வடமேற்கு பகுதியில் வாழ்ந்துவருகிறார்கள்.இவர்கள் இடைக்காலத்தில் அரசுபணிகளுக்காவும் பல்லக்கு தூக்குவதற்காகவும் வரவழைக்கபட்டதாக அறியப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் இவர்கள் அதிக அளவில் குடிஅமர்த்தப்பட்டு வாழ்கிறார்கள் கோயில் உள்நுழையும் அதிகாரம் உள்ளவர்கள்...

நாட்டு இடையர்கள்:
இவர்கள் சேது சீமையின் கிழக்கு தெற்கு பகுதிகளில் பரவலாக வாழ்ந்தனர்.ஆநிரைகள் காப்பதே இவர்கள் குலதொழில் .இவர்களில் பல உட்பிரிவுகள் மற்றும் பட்டங்கள் உள்ளன.சேது மன்னர்கள் காலத்தில் பல வரிகள் விதிக்கப்பட்டுள்ளது
எருமை வரி கீதாரி வரி கோசாலைவரி பேடிவரி நன்மாட்டு வரி சுரப்பிக்காதபசுவரி என பல வரிகள் கட்டியதாக ஆவனங்கள் உள்ளன.ஆடுகளை வைத்து மேய்தழர்களுக்கு கீதாரி பட்டம் வழங்க பெற்றனர்.அதிக அளவு விவசாய தொழில் செய்தவர்கள் முக்கந்தர் என்ற பட்டம் பெற்று வாழ்ந்து வந்தனர்.இன்னும் பல பட்டங்கள் உள்ளன்.இந்த முக்கந்தர் கீதாரி பட்டங்கள் ஆயர் குல கடவுள் கிருஷ்ணரை குறிக்கும் கிருதாரி முகுந்தர் என்ற பெயர்களாகும்...

வலசை இடையர்:
இவர்கள் காரத்திகை மார்கழி மாதங்களில் சோழ தேசம் நோக்கி ஆநிரைகளுடன் வலசை  செல்வார்கள் அங்கு இருக்கும் உறவினர்கள் உடன் இனைந்து ஆநிரைகள் மேய்த்தனர்.அவ்வாறு சென்று அங்கு உள்ள உள்ள உறவு பெண்களை மணந்தவர்கள் பெண்டுக்கு மேய்க்கி இடையர் என்ற பட்ட பெயருடன் அழைக்கப்பட்டனர்..சில நேரங்களில் மணமகன் இல்லாத நேரங்களில் மணமகனின் சகோதரிகள் அல்லது தாய் மனபெண்னுக்கு தாழி கட்டும் வழக்கமும் இருந்துள்ளது...

Comments