Tamil-Ayar

தமிழரும் - ஆயரும்

      தமிழ் மக்களில் கலை, கலாச்சாரம், பெரும் அளவில் இருந்து உள்ளது, 
 பழந்தமிழர் களில்   
ஏழுசை  என்று அழைக்கும் 
 ஏழுசுரங்கள், 
 உள்ளது 

👉🎼 குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைத்தனர்.    
     🎻இவற்றை எப்படி இசைப்பது? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் உயிர் நெட்டெழுத்து ஒலிகளால் இவற்றை இசைத்தனர்.

இவற்றை பழந்தமிழர்கள் தங்களோட பெயரில் 

 👉 ஆங்கு. தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங் கோதையார் எண்று, தண்மகளை நோக்கித் தொண்றுபடு முறையால் நிறுத்தி, இடைமுது மகள்இவர்க்குப் படைத்துக்கோள் பெயர் இடுவாள் குடமுதல் இடமுறை யாக்குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என, விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே,

   கண்ணகியிடம்  ஆய் மூதாட்டி 
அங்கே இருக்கும்  ஏழு  காளைகளை காட்டி அதற்க்கான கோதையர்களையும்,   இடைமகள்  மாதரி தன்னோட மகள் ஐயை அழைத்து அக்கோதையர்களை வரிசையாக நிறுத்தினர், 
அம்மகளீர்கள்,குரல், துத்தம், கைக்கிளை, உழை,இளி, விளரி,  தாரம் என ஏழு பெண்களை நிறுத்தி, குரவை ஆட தொடங்குவார்கள்,

மாயவன் என்றாள்,  குரலை, 
விறல் வெள்ளை 
ஆயவன் என்றாள்  இளி தன்னை
   ஆய் மகள்
பின்னை ஆம் என்றாள், ஓர் துத்தத்தை,    
   மற்றையார்
முன்னை ஆம் என்றாள் முறை.
மாயவன் சீர் உளார், பிஞ்ஞையும் தாரமும்
     வால் வெள்ளை சீரார், உழையும்  விளரியும்
 கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்
 வலத்து உளாள்,
முத்தைக்கு நல்  விளரி தான்
அவருள்,
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு,
தண்டாக் குரவை தான் உள்படுவாள், கொண்ட சீர்
வையம் அளந்தான்  தன் மார்பில் திரு நோக்காப்
பெய் வளைக் கையாள் நம் பின்னை தான் ஆம் என்றே,
 ‘ஐ!’ என்றாள், ஆயர் மகள்,

👉  இந்த காட்சி 
கிருஷ்ணனும், பலராமரும், 
நப்பினையும்  மூவரும் குரவை ஆடிய நிகழ்வு காட்டும் 

 குரல் தன்னை மாயவன் என்றால், 
 இளி தன்னை வெள்ளை ஆயவன் என்றால்  பால் நிறத்வன் பலராமர், 
ஆய் மகள் பின்னையாம்  துத்ததை  நப்பினை பிராட்டி என்கிறாள்,
மற்றவர்கள் முறைப்படி  நின்றனர்  ஒருவர் பின் என்று 

மாயவன் என்ற குரல் பின்னாடி நப்பினையாக துத்தம் பின்னாடி தாரமும் நின்றனர், 
 பலதேவனாக  இளி நின்றாள் அவள் பின்னர் உழையும், விளரியும் நின்று, 
 துத்தம் இடபக்கம்  கைக்கிளையும்  நின்று முறைப்படி  எழுவர் நின்றனர்,
பின்பு நப்பினையாக துத்தம்  கண்ணன் ஆகிய  குரல் மீது  துளப மாலையை போட்டு குரவை ஆட தொடங்கினார்கள், 
அப்பொழுது ஒரு அடியால்  உலகத்தை   (வையகம்) அளந்தவன்  கண்ணன் அவனோட வலமார்பில்  இருக்கும் திருமகளை காணாதபடி  செய்தவள் நப்பினை  என்று சொல்லி ஆர்ப்பரித்தால் ஆய் மூதாட்டி  மாதரி 
அதை ஆம் என்றால் "ஐ ' மாதரி மகள்,



ஏழிசை சங்க தலைவன் 
 கார்த்தவீரிய அர்ச்சுனன் 

  👉  " ஆழிவடி யம்பலம்ப நின்றானும் அன்றொருகால்
#ஏழிசைநூற் சங்கத் திந்தானும்  நீள்விசும்பின்
நற்றேவர் தூது நடந்தானும் #பாரதப்போர்
செற்றானும் கண்டாயிச் சேய், 

யதுகுலத்தில் தோன்றியவன் கார்த்த்வீரிய அர்ச்சுனன் 
 இவன்  ஒரு முறை  இரவவண்னன் கைது செய்ததும் அவனை மீட்க வந்த அரக்கர்களை   கொன்று  அம்புகளை கடலில் கழுவினான், 
  
   " ஆழிவடி யம்பலம்ப, 

ஒரு  காலத்தில்  நாரதமுனிக்கும்  விசுவாவசு என்னும் கந்தருவனுக்கும் இசையில் வாது நேர்ந்தபோது, அவ்விசைச்சங்கத்தில் தலைவனாக இருந்தானென்றும் கூறுவார்கள்,  



    மாயோன் மேய காடுறை யுலகு

 தமிழர்கள் இனக்குழுவாக வாழ்ந்து உள்ளனர் அவர்களுக்கு என்று கடவுள் 
தமிழர்களில் முதல் கடவுள் கிருஷ்ணன் 
 அதாவது முல்லை நிலத்தின் தெய்வம் 
  
 முல்லை நில மக்கள் தங்களுடய வாழ்வில் முறையில் இயற்க்கையுடன்  பாரம்பரிய  மிக்கவர்களாக வாழ்ந்தனர், 
  தமிழர்கள் தங்களோட திருமண நிகழ்வும்  அதை ஒட்டி  வீரத்தையும் காதலையும் பண்புகளையும் கடைபிடித்தனர்,

Comments