Jallikattu
ஏறுதழுதல் ஜல்லிகட்டு
Jallikattu
ஜல்லிக்கட்டு – தமிழனின் வீர மரபு
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானது ஜல்லிக்கட்டு.
இதற்கு ‘மஞ்சுவிரட்டு’, ‘ஏறுதழுவுதல்’ என பல பெயர்கள் உண்டு.
பல நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த வீர விளையாட்டு இன்றும் தமிழகத்தின் பல கிராமங்களில் விளையாடப்படுகிறது.
ஆங்கில மாதங்கள் ஜனவரி முதல் ஜூலை வரை பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.
மகர சங்ராந்தி (பொங்கல்) கொண்டாட்டமாகவும், சிவராத்திரிக்கும் வேறு பல கோவில் திருவிழாக்களுக்கும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
2006ம் ஆண்டுமுதல் இன்றுவரை பல்வேறு சோதனைகளை சந்தித்துவருகிறது, நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு.
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு(ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும்.
மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும்
தை மாதத்தில் மகர சங்கராந்தி திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது.
மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும்.
இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.
வரலாறு
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய்ப் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.
இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டியதால்
தை 1-ம் நாள் முன்தினம் இந்திர வழிபாட்டை (போகி பண்டிகை) ஆயர்கள்/யாதவர்கள் கொண்டாடினர் .
தை 1-ம் நாள் சூரிய பகவானை சூரிய நாராயணராக பாவித்து வழிபட்டனர்.
அதன் மறுநாள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டு பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு) விழாவை கொண்டாடினர்.
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது.
கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
தமிழன் மரபு மற நிலை இன்ப இயல்
எளியவோ ஆய் மகள் தோள்?
என்கிறது கலிதொகை
எளிதக ஆயர்மகளை தழுவ முடியாது என்பது மரபு,
தொன்மை மொழியான தமிழ் மொழியில் வீரம் காதல்,கலாச்சாரம், கலை,ஆன்மிகம் என அனைத்திலும் தலைசிறந்தவர்கள் தமிழர்கள்
தமிழர் மரபிர் திருமணம் மூன்றாக இருந்தது
1.அற நிலை இன்ப இயல்,
2. மற நிலை இன்ப இயல்,
3. அவ நிலை இன்ப இயல்,
இதில் மூத்தகுடியான ஆயர்கள் மற நிலை இன்ப இயலைபைய விரும்புவார்கள்
சீதைய மணந்த யயாதி மகள்வழி பேரனாகிய ஸ்ரீராசந்திரனாகவும் ,
விருஷ்ணி வமசத்தும் மாயோன்,
புறு வம்சத்தில் வந்த அர்ச்சுனன் யுகங்கள் கடந்து ஆயர்கள் இவர்கள் மற நிலை மணமே முடிந்தார்கள்
" ஏறு கொன்றான்
நெம்பொனார்"
👉 யசோதையின் மைத்தனனின் மகளுமாகிய, நந்தமன்னனின் மருமகளுமாகிய மிதிலையின் இளவரிசியும் ஆயர்குல் மங்கையாக நப்பினைய ஏழு ஏறு தழுவி வென்றான் மாயோன்,
ஜனகரின் மகளான மிதிலையின் இளவரசியும் பூமாதேவியாகிய சீதை
சிவனின் வில்லை நானேற்றி சீதைய மணந்தான் மாயவன்
துருபதனின் மகளான பாஞ்சாலத்தின் இளவரசி த்ரபதிய வில்லில் நானேற்றி மணந்தான் பபார்த்தன்,
இவ்வாறு மற நிலை மணமே ஆயர்களின் வாழ்க்கை முறைகள்,
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய கலந்த வீரம்
முல்லைநிலத்தில் உறுவான இந்த வீரவிளையாட்டு தொடரந்து அனைத்து மக்களாலும் இன்று வெகு சிறப்பாக கொண்டானபடுகிறது, இதோட வரலாறு பற்றி நாம் சற்று பார்ப்போம்,
முல்லைநில தெய்வமாக கண்ணபிரான் மாமன் கும்பன் தன் மகளை மணக்க வரும் வரன் ஏழு காளைகளை வென்று கொல்பவனே தன் மகள் நப்பினைய மணக்க மிதிலையில் உள்ள ஏழு காளைகளை வளர்த்து வந்தார்
ஆகையால் ஏழு காளைகளை அடக்கி மாமன் மகளே மணந்தான் மாயவன்
அதை திவ்யபிரபந்தம்
கூறுகையில்,
அம்பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
நெம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த வாறே"
- திருமங்கையாழ்வார்
👉 தன் மாமன் மகளான நப்பினையா பகவான் கிருஷ்ணன் ஏழு காளைகளை அடக்கி மணக்கிறான்
அதே திவ்வயபிரபந்ததில்
‘மென் தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே,
👉என்று ஆழ்வார்கள் பாடிகின்றன
வலிமை மிகுந்த காளைகளை அடக்கினாலே ஆயர் மகள் தோள் தழுவமுடியும் என்பது தன் குலவழக்கபடியம்,
நப்பினை மீது உள்ள காதலால் பகவான் கிருஷ்ணன் தன் மாமான் கும்பகன்னின் காளைகளை அடிக்கி மிதுலையில் இளவரசிய கைகோர்கிறார் கண்ணன்,
இவ்வாறு நப்பினைய மணந்ததை திவ்வயபிரந்தமும் கூறுகையில்
இன்னெரு ஆதராமாக
உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப
👉 எறுதின் முதுகு அதாவது திமிலே நோக்கி தழுவி
உபகேசி தழுவினான் கண்ணன் உபகேசி என்பது நப்பினைய தான் குறிக்கிறது
துவாரகையின் அரசியும் மிதிலையின் இளவரசியாகிய நப்பினைய
துவாரையரசி நப்பினைய
ஆண்டாள் நாச்சியார் எவ்வாறு கூறுகிறார்,
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பினாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்,
பெருகி வரும் மதநீரை உடைய பெரிய யானையோடுகூட போராடி வெற்றி கொள்ளும் தோள் வலிமை உடைய நந்தகோபனின் மருமகளே நப்பின்னையே!
என்று ஆயர்குல மங்காயாகவ தான எண்ணி பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார்
மாமன் மகளை மணக்கும் பழக்கவழக்கம் யுகங்கங்கள் கடந்து இன்றும் யாதவர்களிடன் இந்த பழக்கம் உள்ளது என்பை காணமுடிகிறது,
முல்லைநில மக்களின் வீரம் சொரிந்த காதலை
சங்க இலக்கியமான முல்லைக்கலியில் சோழன் நல்லிருக்கன் கூறியுள்ளார்
ஆயர்களின் காதல் வீரம் கலாச்சாரம் எனவும்
ஆய்மகளின் கற்பை பற்றியும் கூறியுள்ளார் சோழர்
அதோ நிற்காமல் கொல்லேறுகளின் வீரத்தையும் கூறியுள்ளார்
ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறுகொள்பவர் அல்லால்
திரு மா மெய் தீண்டலர்
👉 முல்லைக்கலியில் 102 வது பாடலில்
இளம் ஆயன் ஒருவன் கல்லினும் வலியது அவன் தோள்கள், கரு நீல மலர்கள் போர கருத்துத் திரண்டுருந்தது அவன் மேனி, புற்றாடை அணிந்து அருகில் உள்ள ஆய்பாடியில் தண் நண்பனை காண சென்றான்,சென்ற இடத்திலே பேரழுகுடைய ஆயர்கோன் மகளை கண்டு அவளின் அழகில் மயங்கி தன் நண்பனிடம் யார் அந்த பேரழகி என்றும் பெயர் ஊர்,பெற்றோர்கள் வீனா மீது வீனா எழிப்பினான் நண்பனிடம், அவ்நண்பனே இவள் இவ்வூர் தலைவனின் மகள் இவள் வீட்டீல் கொல்லேறு ஒன்று உள்ளது அதை சண்டை என்றால் சளைக்காது அக்காளைய எவறாலும் வெல்ல இயலவில்லை அக்காளை நீ தழுவினாலை இவ்பேரழைகிய நீ மணக்க முடியும் என்று கூறி ஆந்நாளில் ஏறுதழுதல் நிகழத்தி அவ்வாயச்சியா மணந்தான் ஆவ்வாயான்,
இவ்வாறு 102 பாடலிலிம்,
முல்லைக்கலி 103 ல்
" கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை
நெஞ்சு இலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய மகள் தோள்
103 பாடல் படி வீரம்மில்லாத ஆயமகனை ஆய்மகள் மணக்க மாட்டாள்
உயிரை பிரிக்கும் கோடுகள் உடைய காளைய அனைத்து தழுவாத ஆயனி மறுபிரவியிலும் அவனை மணக்கமாட்டாள் இடைச்சி
என்று தமிழரின் மரபு கூறுகிறது
👉காளை அடக்க அஞ்சும் ஆயனே கனவிலும் மணம் நினைக்கமாட்டாள் இடைச்சி
ஏறுவை தழுபவனே ஆயர்மகளையும் தழுவ முடியும் இது இறைவானகா இருந்தலும் அவனும் கொல்லும் தன்மையுடமை ஏறு தழுவினாலே உரியவளே தழுவ முடியும் என்பது அவனின் குலமரபாகும்
என்பது முல்லைகலி படால் கூறுகிறது,
ஏறுதழுவிம் தொழுவினுல் தமிழனின் வீரமும் கூருமுனைபோல் வலிமையான தோற்றம்முடைய தமிழனை சோழர் விவரிக்குரார்
" தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு
ஏற்றின் அரி பரிபு
அறுப்பன சுற்றி
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்
உருவ மாலை போலக்
👉தொழுவத்தில் ஏறுகளை மதம்பிடித்த யானைபோல பாய்ந்தது
கரிய நிறமுடைய ஏறு காற்றுபோல் ஒர் இளஞனை தாக்குகிறது அத்தாக்குதழுக்கு சிறுத் கலங்காமல் ஆஏற்றின் ஆண்மைய அடைக்கி அதன் மீது கால் ஊன்றி நிற்கிறான் ஒரு பொதுவன், அக்காட்சிய
காணும் போது
எருமை கிடா மீது அமர்ந்து இருக்கும் எமனை தன் கால்களால் உதைத்து தள்ளி அவ்வெருமை மீது ஏறி நின்ற காலத்தில் ஈசனும் இதை போலவே நின்றாம் என்று ஆயமகள் புகழ்பாடுகிறாள் ஒரு ஆயனை கண்டு,
ஆயர்களின் வகைகளை கூறுகிறது,
இப்பாடல்
தமிழனின் வீரமும் காதலும் மெய்சிலிர்க்க வைக்கிறது
" இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோ இனத்து ஆயர் மகன்:
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
புல்லினத்து ஆயர் மகன்,
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோட்டு இனத்து ஆயர் மகன்,
இவ்வாறு மூன்று வகை ஆயர்களும் காளைகளை அடக்கு அதின் மீது அமர்ந்து
மற நிலை இயழ்பில் மணக்கிறான் தமிழன்,
அதற்கு பிறகு
சிலப்பதிகாரத்தில்
ஏறுதழுதல் பற்றிய பதிப்பு
கோவலன் கண்ணகிய ஆய்பாடியில் மாதிரியிடம் விட்டு செல்கிறான், கண்ணகி இருக்கும் கவலையறிந்த மாதிரி அவள் கவலை போக்கு குரவை ஆடுகிறாள் இடைச்சியான மாதிரி
குறவை கூறும் போது தன் பாண்டிய நாட்டின் பெருமையும் மாதிரி வழிவந்த மாயவன் பற்றியும் அவர் குரவையாடுவதை பற்றியும் கூறுபோதும்
" 👉 மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
வடமதுரையின் மாயவன் கண்ணின் முன்னவன் பலராமனும் வரிவளைக்கையுடைய இடையில் தங்க சுமித்திரையும் மாயவனும் குரவையாடுவது சுட்டிக்கட்டி பாடுகிறாள் மாதிரி
👉 வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதானாமென்றே
ஐயென்றா ளாயர் மகள்;”
ஏறுதழுவி கண்ணன் நப்பினையோடு குரவையாடுவதையும்
கண்ணன் ஏறுதழுவியது போல இவ்வாயர் மகளீரும் எறு தழுவி மணப்பார்கள் என்று கூறு
ஏழு காளைய அடிக்கயதால் ஏழு பெண்களை அழைத்து அவர்களுக்குரிய காளையயும் கூறுகிறாள் ஆயர்குல மூதாட்டி மாதிரி
அவைகள்:-
*முதல் பெண்*
காரி கதனஞ்சான் பாய்ந்தானைக்காமுறுமிவ்
வேரி மலர்க்கோதை யாள் ! சுட்டு
இப்பெண் கருமையான காளையை வளர்த்து வருகிறாள், இதன் சீற்றத்தை அடக்குபவர்களுக்கே தேன் நிறைந்த மலர்மாலையை சூடிய முதல் பெண் ஆட்படுவாள்.
இரண்டாம் பெண்
நெற்றிச் செகிலையடர்த்தாற் குரியவிப்
பொற்றொடி மாதராள் தோள்!
👉நெற்றியில் சிவந்த சுட்டியை உடைய காளையை கொண்டவள் இப்பெண் இதனை அடக்குபவர்களுக்கே பொன் வளைஅணிந்த இவளது தோள்கள்.
மூன்றாம் பெண்
மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம
முல்லையம் பூங்குழல் தான்
👉முல்லை மலரை சூடிய இந்த பெண் வலிமை மிக்க எருதினை வளர்த்து வருகிறாள் இதனை அடக்குபவனையே
இவள் மணம் புரிவாள்.👈
நான்காம் பெண்
நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கேயாகுமிப்
பெண்கொடி மாதர்தன் தோள்!
👉நுண்ணிய புள்ளிகளை உடைய வெள்ளை எருதினை கொடி போன்ற இப்பெண் வளர்த்து வருகிறாள், இவளது தோள்கள் இக்காளையினை அடக்குபவர்களுக்கே உரியன.👈
ஐந்தாவது பெண்
பொற்பொறி வெள்ளை யடர்த்தாற்கேயாகுமிந்
நற்கொடி மென்முலை தான்!
👉அழகிய இம் மறை ஏற்றினை அடக்கியோனுக்கே இவ்வழகிய கொடிபோன்றாளுடைய மெல்லிய முலைகள் உரியன வாகும்.👈
ஆறாவது பெண்
வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக
கொன்றையம்
பூங்குழ லாள்!
👉சீரிய வெற்றி தரும் காளையை இப்பெண் வளர்க்கிறாள், இதை அடக்குபவர்களுக்கே கொன்றை போல் கூந்தல் உடைய இப்பெண் சொந்தம்.
ஏழாவது பெண்
தூ நிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப
பூவைப் புதுமல ராள்!
👉தூய வெள்ளை நிற முடைய இவ் வேற்றின் சீற்றத்தினைக் கெடுத்தவனுக்கு இக் காயாம் பூப்போலும் நிறத்தினையுடையாள் மனைவி ஆவாள்.👈
இவ்வாறு ஏறுதழுதல் பற்றிய செய்தி ஆய்ச்சியர் குறவை கூத்தில் வருகிறது.
அடுத்து
மலைபடுபடகாமில்
ஆயரும் குறவரும் தன் காளைகளை மோத விட்டு வெற்றி பெரும் காளை தன்னோட வெற்றியாகவே கருதினர்கள் என்றும் வருகிறது,
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தன் ஊறுபடத்தாக்கிக்
கோவலா் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை (மலை. 330-335)
இவ்வாறு தமிழர்களின் காளை காதலுக்கும் வீரத்திற்கும் விவசாயத்திற்கும் பெரும் மங்கு வைத்துள்ளது,
இவ்வீரம் திரும்பி வரு வேண்டும் என்றால் யாதவர்குல நாச்சியாருகள் நினைத்தால் திரும்பி வரும்
கருத்துகள்