FIRST FREEDOM FIGHTER

மாவீரன்  அழகுமுத்துகோன்   யாதவ்

              தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய  மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவரேப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்' என்றால் பீரங்கிகள் முழங்கும்.
 மாவீரன் அழகு முத்துக்கோனும் அவரது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.
"மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்" என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், "தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் " என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.
பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் இரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.பாரத்தேசத்தின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன் தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் யது வம்சம் தந்ததில் பெரும்  மகிழ்ச்சி அடைகிறோம்,
   மாவீரன் அழகுமுத்துக்கோன்(1728 -1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். பாரத்தின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர்  
 வீர அழகுமுத்துக்கோன் (1728-1757).

பிறப்பு

                மாவீரன் அழகுமுத்துகோன்  1728 -ம் ஆண்டு
பாக்கிய தாய், அழகுமுத்து சேர்வை க்கு மகனாய் பிறந்தார்
மாவீரன் அழகுமுத்து, பற்றிசெய்திகள் எட்டையாபுரம்  சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை  மற்றும், தமிழ் இதழ்களில்
பேசப்பட்டிருக்கிறார்!.

1962-ல் 'தாமரை' இதழ் வீரன் அழகுமுத்துகோன் பற்றிய 
செய்தியை முதலில் வெளியிட்டது.அப்போது யாரும் வீரன்
அழகுமுத்துகோனை கண்டுகொள்ளவில்லை!.சுதந்திர தின
வெள்ளிவிழாவை ஒட்டி 1972-ல் 'தினமலர்' வீரன்
அழகுமுத்துகோன் வரலாற்றை வெளியிட்டது. அப்போதும்
யாரும் கண்டுகொள்ளவில்லை!.

1976-ல் எட்டயாபுரத் தமிழ் எழுத்தாளர்
சங்கம் 'எட்டயாபுரம் வரலாறு' என்ற 60 பக்க நூலை வெளியிட்டது.அதில் பக்கம் 11முதல்25 முடிய வீரன் அழகுமுத்துகோன் வீரசரித்திரம் பேசப்பட்டது.அப்போதும்
யாரும் கண்டுகொள்ளவில்லை!.

1983-ல் 'சுதந்திர வீரன் அழகுமுத்து யாதவா என்ற தலைப்பில்
ஒரு நூல் வெளியானது. இதன் பிறகு தான் ஒரு சிலிர்ப்பு உருவனது இடையர் சமூகத்தினர் வீரன் அழகுமுத்துகோனை தூக்கிப்பிடிக்க தொடங்கினர்!. அந்த நூலை அடியொற்றியும், புதிய செய்திகளைத் திரட்டியும்   
தாய்,ஓம்

கட்டுரை வெளியிட்டது.!
வீரன் அழகுமுத்துகோனின் வாரிசுதாரர்கள் இனங்காணப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள் மதுரை யாதவர் கல்லூரியில் 1993-ல் வீரன் அழகுமுத்துகோனுக்கு சிலை எடுத்தார்கள்!
அந்த விழாவில் வி.கலைமணி 'விடுதலைக்கு வித்திட்ட
வீரர் அழகுமுத்து கோன் ' என்ற நூலை வெளியிட்டார்!..
வீரன் அழகுமுத்துகோனை முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்கள்
வே.சதாசிவன்,மா. இராஜாமணி,
இளசை மணி இந்த
மூன்று எட்டயாபுரத்துக்காரர்கள் தான் வீரன்
அழகுமுத்து கோனை போற்றும் யாவரும இம்
மூவருக்கும் நன்றி கூறக்
கடமைப்பட்டவர்கள்.இம் மூவருள்ளும்
மா.இராஜாமணி பங்கு மிகுதியனது,
  
தமிழக அரசு 

செல்வி.ஜெயலலிதா அவர்களால் நிறுவிய சிலை
                               
                 புரட்சித்தலைவி தமிழக முதல்வர் தங்கத்தாரகை விருது பெற்ற உலகம் போற்றும் உத்தம முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர்  டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி" இந்திய விடுதலைப் போரில் இடுபட்ட அனைவருக்கும் முன்னோடி வீரன் அழகு முத்து கோன்"மாண்புமிகு முதல்வர் பெருமிதம் 15/3/1996. அன்று நடைபெற்ற வீரன்அழகு முத்துக் கோன் திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் வீரன்அழகு முத்து கோன் போக்குவரத்துக் கழகதொடக்க, விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்ஆற்றிய உரையீன் ஒரு பகுதி தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த யாதவர் இன மக்கள் இந்தியத் துணைக் கண்டம்  முழுவதும் வசித்து வருகிறார்கள்.இந்திய சுதந்திர வரலாற்றில் ஆரம்ப காலகட்டத்திலேயே மற்ற வீரர்களுக்கும் வீராங்கானைகளுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கிய தங்களது குலத்தோன்றல் வீரன்அழகு முத்து கோன் அவர்களின் புகழுக்கு சிறப்புச் சேர்க்கப்படவில்லையே என்ற ஆதங்கம் அவர்கள் மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்ததை நான் அறிவேன்.அந்த மக்களின் ஆதங்கமும் மனக் குறையும் இன்று நீங்கிவிட்டது என்று அறியும்போதுமட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம், 

மாவீரன் அழகுமுத்து பேருந்து நிலையம் 

  அழகுமுத்துகோன் மாவட்டம் இன்று  தேனி மாவட்டம்,
மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் முன்னோர்கள பற்றிசெப்பேடுவிசுவநாதநாயக்கர் அழகுமுத்துகோன் முன்னோர்களுக்கு எழுதி கொடுத் பட்டயத்தில்கோபால வம்சம் கிருஷ்ணா கோத்திரம் என்று குறிப்பிட்டு உள்ளனர்,

 நாயக்கர் காலசெம்பு பட்டையம் கி.பி.1556-1557..

பட்டயத்தில் எழுதப்பட்டுள்ள செய்திகள்..உசுபஷத்திரி விசையாப் புதையசாலி வாகன சகாப்தம் மேலச் சொல்லி நின்றகொல்லம் .எளஙளஉ வருஷம் சூசள எயஅளு சித்திரை மீ றயஅஉ ,சுக்கில்பச்சத்து பஞ்சமியில  ஸ்ரீ உது காசிப் கோத்திரம் வசுவநாத நாயக்கர்அவர்கள் புத்திரர் கிருஷ்ணப்ப நாயக்கர்அவர்கள் புத்திரான பெரிய வீரப்பநாயக்கர்அவர்கள் கிட்டிண கோத்திரம் கோபால வம்கம்அழகுமுத்து சேர்வைகாரன் புத்ததிரரானஅழகுமுத்து சேர்வைகாரனுக்கு பூமிசாதனப்பட்டையம் எழுதிக்கொடுத்து சாதனமாவது ஸ்ரீ துளசாதி ராச, ராசபரமெசுவர ஸ்ரீ வீரப்பிரதாப ஸ்ரீ ரெங்கராயமகாதேவரய அய்யனவர்கள் நகரத்தில்பிரிதி விசாம ராஜ்ஜியம் பண்ணுகிறபோது எங்கள் அமரத்துக்கு விட்டுக் கொடுத்ததிருச்சிராப்பள்ளித்தெற்கு சாவடிக்கு தெற்கே திருவிடைராஜ்ஜியகயத்தறு சீமை ஆசூர் வளநாடு கட்டாலன்குளம்சேரந்த பூமி தனக்கு அமரத்துக்கு விட்டுக்கொடுத்து வடக்கு மால் வானரமுட்டி எல்லைக்கும் சுலக்கல்லக்குங்கொத்து வாரெட்டி ஊரணிக்குக் தெற்கு வடநீள மூளைமால் மேற்படி எல்லைக்கும்தென்மேற்கு கிளக்கு மால் இடை செவல்எல்லைக்கும் மேற்க்குதென்கிளக்கு மால் மெய்த்தலைவன்பட்டி எல்லைக்கும் மேற்கு ,தெற்குமால்திருமங்கலக்குறிச்சி எல்லைக்கும் வடகிளக்கு மேலமால் மேற்படி எல்லைக்கும்நிலப்பதைக்கும் அய்யனார் எல்லைக்கும்தென்கிளக்கு இந்த நான்கு எல்லைகளுக்குளபட்ட பூமியும் இதுவும் மேற்படி செகாமதீத்தான் பட்டி கிராமம் கிழக்குமால் தொட்டன்பட்டி எல்லைக்கும் மேற்கு மால்பசுவந்தனை எல்லைக்கும் கிழக்கு வடக்குமால்கோட்டூர் எல்லைக்கும்தெற்கு இன்னான்கு எல்லைகளுக்குள் பட்டநிலமும் ,குருவி நத்தம் கிளமால் கோட்டூர்எல்லைக்கும் ராக்காட்சியம்மன் கோவிலுக்கும்மேற்கு தெற்கு மால் வண்டானம் எல்லைக்கும்வடக்கு , மேற்கு மால் கொப்பம்பட்டி எல்லைக்கும் கிழக்கு வடக்குமால்காமய நாயக்கன் பட்டி எல்லைக்கும்தெற்கு இன்னான்கு எல்லைளுக்குள் பட்டநிலமும் சோழபுரம் கீழ்மால்எப்போது வென்றான் எல்லைக்கும்மேற்கு தெற்குமால் வெள்ளக்கோவில்எல்லைக்கும் வடக்கு கிளக்கு மால்பூங்கவர்நத்தம் எல்லைக்கும்வடக்கு மேற்குமால்மஞ்சநாயக்கன்பட்டி எல்லைக்கும்தெற்கு வடநீள மூலமால் அருன்குளம்எல்லைக்கும் தென்மேற்கு..

நாயக்கர் காலசெம்பு பட்டையம் கி.பி.1556-1557 மீதபாகம்..

         இன்னான்கு எல்கைகக்குள்பட்டநிலமும்.வாலனப்பட்டி கிழமால் ஈரால்எல்கைக்கும் மேற்கு ,  தெற்குமால்மஞ்சநாயக்கன்பட்டி எல்கைக்கும்வடக்கு ,மேலமால் செம்ப்புதூர் எல்லைக்கும்கிழக்கு வடக்குமால் மேல ஈரால் எல்லைக்கும்தெற்கு இன்னான்கு எல்லைக்குள்பட்ட நிலமும்மாத்தானம்பட்டி கிழக்குமால்வைப்பாறு எல்லைக்கும் மேற்கு தெற்குமால்குளத்தூர் எல்லைக்கும் வடக்கு மேற்குமால்செங்கப்படை எல்லைக்கும் கிளக்கு வடக்குமால்மந்திக்குளம் எல்லைக்கும் பெருமாள்கோவிலுக்கும்தெற்கு இன்னான்கு எல்லைக்குள்் பட்டநிலமும், இதில் கட்டாலன் குளம்சோபுரம,வாலன்ப்பட்டி , மாந்தானம்பட்டி , ஆககிராமம் நாலும் தனக்கு அமரராகவும் தீத்தான்பட்டி கிராமம் குரவநத்தம் கிராமம்மாண்டு அழகப்பன் சேர்வைக்காரன்பட்டதற்கு இரத்த மாணியாகவும் விட்டுக்கொடுத்தபடியினால் ஆகக் கிராமம் ஆறும்அதில்ச் சேர்ந்த பட்டியம் ,அதிலுள்ளநஞ்சை புஞ்சை , நிதி நிசசெப மஞ்சில்,தரு பாசானம் அச்சண்ணிய ஆகாமியம் சித்தசாத்தியங்கள் என்கிற அட்ட யோகதெசகாரியங்களும  உன்னுடைய புத்திர பவுத்திர பராம்பரயமாகஆச்சாதிராக்மாகத் தானதி விணியவிக்கிரைய யோக்கியமாவும்ஆண்டனுபவித்துக்கொண்டு சுகமாயிருக்குவும் .இந்தப்படிக்கு காசிப கோத்திரம் விசுவனாதநாயக்கர் அவர்கள் புத்திரான பெரிய வீரப்பநாயக்கர் அவர்கள் கிருட்டிண கோத்திரம்கோபல வம்சம் அழகுமுத்து சேர்வைகாரன்புத்திரனா அழகுமுத்து சேர்வைகாரனுக்கு எழகொடுத பூமிதாசனபட்டயம்..    பட்டையத்தில் உள்ள பதிவை மேலே  பதியாக்கம் செய்யப்பட்டு உள்ளது,

அழகுமுத்துகோன்

 கோன்  என்றால் - அரசன்,  தலைவன் 

           பழந்தமிழர் காலம் முதல் இன்றும் தன்னோட தன்மை குறையாமல் வாழ்ந்து வரும் ஒரே குடி  ஆய் குடி தான் 
 ஆயர்கள் முல்லை நிலத்தை சேர்ந்தவர்கள்,  அங்கே தான் நாகரிகம் உருவானது, ஆயன் கையில் வைத்து இருக்கும் கோலே செங்கோல் ஆனது, கோ  என்றால் பசு  எருமை  குறிக்கும்  கோட்டினம், கோவினம்  என முல்லைக்கலி பாடலில் ஆயர்க்ள பற்றி சொல்ல பட்டு உள்ளது, 
 கோ ஆகிய பசுவை பாதுகாப்பவனே தலைவன் அவனே கோன் என்று அழைக்கப்பட்டான், ஆ என்றாலும் பசு அதாவது ஆவினம் 
அதை காக்கும் வீரனே "ஐ'  என்ற தலைவன் ஆகிறான் 
ஆ ஐ  ஆயன் என்று மருவிய பெயரே ஆயன்,கோன்  ஆகிறான், 
கோவிந்தன்  - பசுவை காப்பவன் அரசன் 
கோவலர் - பசுவை காத்து வளர்ப்பவர் 
கோபாலன் கோ காக்கும் பாலகன்  இது பொதுவா கண்ணன் பலராமன் குறிக்கும்,
  கோன்,  கோபன்    என்பது முல்லைநில தலைவர்களுக்கு உரிய பெயர், 

கோன், கோனார் என்ற பெயரில் உள்ள கல்வெட்டு ஒன்றிலும் கால்நடை சமூகமான யாதவர்களுக்கே  என்பதும் கொங்கு தேசத்தில் இருந்து எடுத்த கல்வெட்டு ஒன்றில் குறிப்பிட்டு உள்ளது,  அக்கல்வெட்டு கீழே இணைக்கப்பட்டு உள்ளது

கொங்கு தேசத்தில் கிடைத்த கல்வெட்டு

  மாவீரன் அழகுமுத்துகோன்  வாரிசு பற்றிய அரசு ஆதரங்கள்  பதிவிட பட்டுள்ளது,