சிலப்பதிகாரம்

ஆய்ச்சியர் குரவை


கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும் வில்லும்
நாவலந்தண் பொழின்மன்னர்
ஏவல்கேட்பப் பார்அரசாண்ட
மாலைவெண்குடைப் பாண்டியன் கோயிலுட்
காலைமுரசம் கனைகுரல் இயம்புமாதலின்
நெய்ம்முறை நமக்கின்றாகுமென
ஐயைதன் மகளைக்கூஉய்க்
கடைகயிறு மத்துங்கொண்
டிடைமுதுமகள் வந்துதோன்றுமன். 


விளக்கம்:-
         இமயத்தில் பொரிக்கப்பட்டு இருக்கும்  தென்னவன் மீன் கொடி அதன் அருகில் அதை வணங்குவது போல சேர சோழர்களின் வில்லும் அம்பும் அதன் அருகில் பொரிக்கப்பெற்றதும்
இவ்வாறு நாவலன்தீவு முழுவதும் தன்னோட ஏவலை கேட்டு நடக்குத் படி  அரசாண்டவன் பாண்டியன்   முத்து மாலைய அணிந்து வெண்குடையுடன் இருக்கு பாண்டியன் மன்னன் அவன் கோவிலில் காலையில்  முரசொலி கேட்கிறது, ஆதலால் இன்று நெய் வளங்கும் முறை நம்முடையது என்று  தயிர் கைடைய கையில் கயிறு எடுத்துக்கொண்டு இடையர்குல மூதாட்டி மாதிரி தன்   தன் மகள் ஐயையும் அழைத்துக்கொண்டு சென்றார்
                   முன்னோர் கலத்தில் கண்ணன் துவாரகையில் இருந்து அழைத்து வந்த குடும்பத்தில் மாதரி குடும்பமும் ஒன்று என்பதை உரிதி செய்யும் பாடல்


பாடல்:-  
குடப் பால் உறையா; 

குவி இமில் ஏற்றின்

மடக் கண் நீர் சோரும்; 
வருவது ஒன்று உண்டு!
உறி நறு வெண்ணெய் உருகா; உருகும்    மறி, 
தெறித்து ஆடா; 
வருவது ஒன்று உண்டு!
நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்;

மால் மணி வீழும்; 
வருவது ஒன்று உண்டு!

 விளக்கம்
  பிறை ஊற்றி வைத்திருந்த குடத்தில் பால் உறையவில்லை.
காளை மாட்டின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
உறியில் இருந்த வெண்ணெய் உருகவில்லை.
கன்றுக்குட்டி பால் குடிக்கத் தன் தாயிடம் துள்ளி ஓடவில்லை.
நான்கு முலைகளை உடைய பசுக்கள் நடுங்கிக்கொண்டு கத்தின.
அவற்றின் கழுத்தில் இருந்த மணி அறுந்து விழுந்தது.
இந்த நிகழ்வுகளைப் பார்த்தால் ஏதோ தீங்கு வரப்போகிறது
என மாதரி மகளிடம் கூறினார்,


பாடல்:-
  குடத்துப் பால் உறையாமையும்,

குவி இமில் ஏற்றின்

மடக் கண் நீர் சோர்தலும்
உறியில் வெண்ணெய் உருகாமையும்,
மறி முடங்கி ஆடாமையும்,
மால் மணி நிலத்து அற்று வீழ்தலும்,
வருவது ஓர் துன்பம் உண்டு’ என,
மகளை நோக்கி, ‘மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும்-தான் காண,
ஆயர் பாடியில், எரு மன்றத்து,
மாயவனுடன் தம்முன் ஆடிய
வால சரிதை நாடகங்களில்,
வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்’ என்றாள்-
‘கறவை, கன்று, துயர் நீங்குக எனவே,’

விளக்கம்:-


     குடத்தில் பால் உறையவில்லை
காளை மாட்டின் கண்ணில் கண்ணீர் வடிகிறது,
உறியில் வெண்ணெய் உருஉகவில்லை,
கன்று பால் குடிக்க மறுக்கிறது
இவற்றைக் எல்லாம் காணும் போது வருவது ஓர் துன்பம்  என்று மனம் மயங்க வேண்டாம்.
மண்ணிலுள்ள பெண்களுக்கெல்லாம் அணிகலனாக விளங்கும் கண்ணகி காணுமாறு குரவை ஆடுவோம்.
ஆயர்பாடியில் அன்று எருமன்றத்தில் மாயவனுடன் அவன் அண்ணன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுவோம்.
கறவை, கன்று ஆகியவற்றின் துயரைக் களைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஆடுவோம்  என்று மாதரி தன் மகள் ஐயையிடம் கூறினாள்.

பாடல்:-
     காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ்

வேரி மலர்க் கோதையாள்; சுட்டு,


நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப்
பொன் தொடி மாதராள் தோள்.

மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம்
முல்லை அம் பூங் குழல்-தான்.

நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப்
பெண் கொடி மாதர்-தன் தோள். 

பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்: இந்
நன் கொடி மென்முலை-தான்.

வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள், இக்
கொன்றை அம் பூங் குழலாள்.

தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப்
பூவைப் புது மலராள்.
 
விளக்கம்:-
   குரவை ஆட்டத்தின் கொள்கை 
எந்தப் பெண் யாருக்கு உரியவள் என்று சுட்டிக்காட்டி நிறுத்துதல்

     தேன்மலர் சூடிய இவள் காரிக் காளையை அடக்கியவனை விரும்புவாள். 
    பொன்வளையல் அணிந்த இவள் தோள் நெற்றியில் செஞ்சுழி உடைய காளையை அடக்கியவனுக்கு உரியது. 
    முல்லைப் பூ சூடிய இவள் கொழுத்த. காளைமேல் ஏறி வருபவனுக்கு உரியவள். 
    இந்தப் பெண்ணின் தோள் சின்னச் சின்ன புள்ளி கொண்ட வெள்ளைக் காளையை அடக்கியவனுக்கு உரியது. 
    இந்த மென்முலையாள் பொன்னிறப் புள்ளி கொண்ட வெள்ளைக் காளையை அடக்கியவனுக்கு உரியவள். 
    கொன்றைப் பூ சூடிய இவள் பலரை வெற்றி கண்ட கொழுத்த காளையை அடக்கியவனுக்கு உரியவள். 
   காயாம்பூ அணிந்த இவள் தூய வெள்ளை நிறக் காளையை அடக்கியவனுக்கு உரியவள்.
   இப்படி ஏழு பெண்களை நிறுத்தி, ஏழு காளைமாடுகளைச் சொல்லிக் காட்டி குரவை ஆடத் தொடங்கினாள்.


ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர் இளங் கோதையார்,-
என்று, தன் மகளை நோக்கி,
தொன்று படு முறையான் நிறுத்தி,
இடை முதுமகள் இவர்க்குப்
படைத்துக் கோள் பெயர் இடுவாள்;
குடமுதல் இடமுறையா, குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என,
விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே.

விளக்கம்:- 
                இவ்வாறு ஏழு பெண்களைக் குரவை ஆட நிறுத்தி, அவர்களை ஏறு தழுவக் காளை வளர்த்தவர்கள் என்று சொல்லி அந்த ஏழு பெண்களுக்கும் தானக்குறிய  பெயர்களைச் கூறி 

தன் மகளை இடது பக்கம் நிறுத்தி, அவளிடமிருந்து தொடங்கிப் பெயர்களைச் கூறினார் மாதரி குரல், துத்தம்,கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், 

 பாடல்:-
எனப் பெயர் என ஏழு பெண்கள் பெயரும் தமிழ் ஏழு இசைகளினு பெயராகவே இருந்தது

முல்லை நிலமக்கள் தமிழும் அதோட பினைந்து இருப்பதையும் விளக்கிறது,

  மாயவன் என்றாள், குரலை; விறல் வெள்ளை-
ஆயவன் என்றாள், இளி-தன்னை; ஆய் மகள்
பின்னை ஆம் என்றாள், ஓர் துத்தத்தை; மற்றையார்
முன்னை ஆம் என்றாள் முறை.
மாயவன் சீர் உளார், பிஞ்ஞையும் தாரமும்;
வால் வெள்ளை சீரார், உழையும் விளரியும்;
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள்,
முத்தைக்கு நல் விளரி-தான்
அவருள்,
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு,
தண்டாக் குரவை-தான் உள்படுவாள், கொண்ட சீர்
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்காப்
பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
‘ஐ!’ என்றாள், ஆயர் மகள்,


  விளக்கம்:-
  
 மாயனும் அவன் அண்ணனும் அன்று ஆயர்பாடியுல் ஆடிய குரவையை காட்டுகிறது,



   குரல் தன்னை மாயவன் என்றால், 
 இளி தன்னை வெள்ளை ஆயவன் என்றால்  பால் நிறத்வன் பலராமர், 
ஆய் மகள் பின்னையாம்  துத்ததை  நப்பினை பிராட்டி என்கிறாள்,
மற்றவர்கள் முறைப்படி  நின்றனர்  ஒருவர் பின் என்று 

மாயவன் என்ற குரல் பின்னாடி நப்பினையாக துத்தம் பின்னாடி தாரமும் நின்றனர், 
 பலதேவனாக  இளி நின்றாள் அவள் பின்னர் உழையும், விளரியும் நின்று, 
 துத்தம் இடபக்கம்  கைக்கிளையும்  நின்று முறைப்படி  எழுவர் நின்றனர்,
பின்பு நப்பினையாக துத்தம்  கண்ணன் ஆகிய  குரல் மீது  துளப மாலையை போட்டு குரவை ஆட தொடங்கினார்கள், 
அப்பொழுது ஒரு அடியால்  உலகத்தை   (வையகம்) அளந்தவன்  கண்ணன் அவனோட வலமார்பில்  இருக்கும் திருமகளை காணாதபடி  செய்தவள் நப்பினை  என்று சொல்லி ஆர்ப்பரித்தால் ஆய் மூதாட்டி  மாதரி 
அதை ஆம் என்றால் "ஐ ' மாதரி மகள்,

 அவர் தாம்
செந்நிலை மண்டிலத்தான், கற்கடகக் கை கோஒத்து,
அந் நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார், முன்னைக்
குரல்-கொடி தன் கிளையை நோக்கி, ‘பரப்பு உற்ற
கொல்லைப் புனத்துக் குருந்து ஒசித்தான் பாடுதும்,
முல்லைத் தீம் பாணி’ என்றாள்.
எனா,
குரல் மந்தம் ஆக, இளி சமன் ஆக,
வரன்முறையே, துத்தம் வலியா, உரன் இலா
மந்தம் விளரி பிடிப்பாள், அவள் நட்பின்
பின்றையைப் பாட்டு எடுப்பாள்.

  
 விளக்கம் :-
அந்த எழு பெண்களும் சரியான வட்டத்தில் நண்டுப் பிடி போல் கைகளைக் கோத்துக்கொண்டு சீராக ஆடத் தொடங்கினர். 

  முதலில் குரல்  என்று பெயரிடப்பட்ட பெண் தன் கிளை (உறவு முறையாள்) துத்தத்தை நோக்கி (மாயவன் தன் உறவு முறையாள் நப்பின்னையை நோக்கி, கொல்லையில் குருந்த மரத்தைச் சாய்த்தவன் சீரை முல்லைப் பண்ணால் பாடுவோம் என்றாள்.   

அவள் அவ்வாறு கூறியதும் 
குரல் நரம்பு மந்தமாக ஒலிப்பது போலவும், 
இளி நரம்பு சமமாக ஒலிப்பது போலவும், 
துத்தம் நரம்பு வலிமையாக ஒலிப்பது போலவும், 
விளரி நரம்பு மந்தமாக ஒலிப்பது போலவும் 

நட்பு நரம்புகள் (நரம்புகளின் பெயர் சூட்டப்பட்ட மகளிர்) பாடத் தொடங்கினார்கள்.

   கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! 

பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! 

கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்

முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!


 விளக்கம்:-
கன்றுக்குட்டி உருவில் தன்னைக்கொல்ல  வந்தவனை மரத்தில் காய்கனிகளை உதுர்த்தும் தொரட்டிய போல அக்கன்றை தூக்கி எறிந்து விளாம்பழத்தை உதிர்த்த மாயவன் இன்று நம் ஆனிரைகளைக் காக்க  வருவானாகில் அவன் ஊதும் கொன்றைக் காயால் செய்யப்பட்ட குழலின் இசையைக் கேட்கலாமே, தோழி!
என்றால் ஒரு பெண்

   வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாக்கிக் கொண்டு கடலைக் கடைந்த மாயவன் இன்று நம் ஆணிரைகளைக் காக்க வருவானே என்றால் அவன் ஊதும் ஆம்பல் கொடித் தண்டினால்  செய்த குழலின் இசையைக் கேட்கலாமே, தோழி!  என்றால் ஒருத்தி

  அன்று  குரந்த மரமாக நின்ற பகவர்களை ஒடித்த மாயவன் இன்று நம் ஆனிரைகளைக் காக்க வருவான் எனில் அவன் ஊதும் முல்லைப் பண்ணைக் கேட்கலாமே, தோழி! என்றால் மற்றி ஒரு பெண்,


    தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை-
அணி நிறம் பாடுகேம் யாம்.

இறும் என் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்?
அறுவை ஒளித்தான் அயர, அயரும்
நறு மென் சாயல் முகம் என்கோ யாம்?

வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்?
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்?

தையல் கலையும் வளையும் இழந்தே
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்?
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி,
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்?


விளக்கம்:-
  
 யமுனை நதிகரையில் மாமன் மகளும் தன்னோட காதலியுமான நப்பினை பிராட்டி கூட கண்ணன் செய்த காதல் விளையாட்டை பாடுவோம்,



  யமுனைத் துறைவன் மாயவனோடு காதல் ஆட்டம் ஆடிய நப்பின்னையின் அழகினைப் பாடுவோம். 

என் மேனி அழகெல்லாம் வளைந்தாடும்படி என் ஆடைகளைக் கவர்ந்து சென்றானே, அவன் சாயல் முகம் கொண்டவள் நப்பின்னை என்று பாடுவோமா? 

யமுனை நீரில் நின்ற ஆய்ச்சியருக்கு வஞ்சம் செய்தானே அந்த மாயவனின் நெஞ்சத்தைக் கவர்ந்தாளே, நப்பின்னை, அவள் நிறைதான் நிறை என்று போற்றிப் பாடுவோமா? 

ஆடையையும், வளையலையும் இழந்து, நாணத்துடன் கைகளால் தன் கண்களைப் பொத்திக்கொண்டு ஒளிந்துகொண்டாளே. அவள் முகத்ததைக் கண்டு ஆசை கொண்டானே, அவன் அழகுதான் அழகு, என்று போற்றிப் பாடுவோமா?

என்று நப்பினை பிராட்டி கூட. கேசவன் செய்த காதல் லீலை பற்றி  சொல்கின்றது,
  
    
    கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான்,
மதி புரையும் நறு மேனித் தம்முனோன் வலத்து உளாள்,
பொதி அவிழ் மலர்க் கூந்தல் பிஞ்ஞை: சீர் புறங்காப்பார்
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார். 

மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள், 
பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்து உளாள்,
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை: சீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார்,

விளக்கம்:-
  மாயவன் ஆகிய. குரலை இடப்பக்கம் நின்றார் 
வெள்ளையன் எனுகிற இளி வலப்பக்கம் நின்றான். 
துத்தம்  என்னும் நப்பின்னை ஆடுகிறாள். 
நாரதர் யாழ் இசைக்கிறார். 
குரவைக் கூத்து இப்படி நடைபெறுகிறது.
   

மாயவன் தம்முன்னினொடும், வரிவளைக் கைப் பின்னையொடும்,
கோவலர் - தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம்சோர,
ஆய் வளைச் சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த,

தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே.

விளக்கம்:-
 மாயவனும் அவன் முன்னே அண்ணன் பலராமனும் பார்த்துக்கொண்டிருக்க, நப்பின்னையோடு சேர்ந்து சிறுமியர் கூந்தல் பின்புறம் அசைந்தாடக் குரவை ஆடுகின்றனர்.யசோதையார் தொழுவத்தில்  உள்ள பூக்கள் கொட்டிக் கிடக்கும் மன்றத்தில் இவர்கள் ஆடும் ஆட்டம் தகைமை சான்று விளங்கியது.


  எல்லாம் நாம்,

புள் ஊர் கடவுளைப் போற்றுதும், போற்றுதும்-
உள்வரிப் பாணி ஒன்று உற்று. 

கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம், 
தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே:
தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக்
கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால். 

பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான்,
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்:
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்
பொன் அம் திகிரிப் பொரு படையான் என்பரால், 

முந்நீரினுள் புக்கு, மூவாக் கடம்பு எறிந்தான்,
மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்:
மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்
கல் நவில் தோள் ஓச்சி, கடல் கடைந்தான் என்பரால்.

விளக்கம்:-

   குரவை ஆடும் பெண்கள் அனைவரும் மூவேந்தர் பற்றி பாடுவோம் என்று கூறி,

மூவேந்தர்கள் சேரசோழபாண்டியன்
மூவரும் கருடபறவை மீது அமர்ந்து செல்லும் கண்ணனை பற்றி பாடுவோம் என்று பாடுகிறார்கள்,

  கோக்காத சந்தன மாலையும், கோத்த முத்து மாலையும் தேவர் கோன் இந்திரன் மாலையையும் தென்னவன் தன் மார்பில் சூடிக்கொண்டான். அவனை, கோகுலத்தில் நிரே மேய்த்து குருந்த மரம்  சாய்த்து கோபியர் மானம் காத்தவன் கண்ணன் என்று சொல்கின்றனர். 

  புகார் அரசன் வளவன் இமயத்தில் தன் புலிச்சின்னத்தைப் பொறித்தான். அவனைச் சக்கரத்தை தன்னோட ஆயுதமாக வைத்து இருந்து மாயவனே  என்கின்றனர். 

   வஞ்சி அரசன் சேரன் கடலில் படையுடன் சென்று கடம்பர்களின் கடம்பு மரத்தை வெட்டினான். அவனைக்  நீரின் அதிபது கடைலை கடைந்து அமிர்தம் எடுத்து  ஆயவன் என்கின்றர்.


இவ்வாறு மூவேந்தர்கள் பற்றி பாடுகின்றன, மூவரும் கோகுல நந்தன் யாதோசையில் இளம் சிங்கம் கண்ணனின் வம்சத்தனர் என்று சொல்கிறார்,

    வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி,
கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே:
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண் கை:
மலர்க் கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே! 

‘அறு பொருள் இவன்’ என்றே, அமரர் கணம் தொழுது ஏத்த,
உறு பசி ஒன்று இன்றியே, உலகு அடைய உண்டனையே:
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய்:
வண் துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே! 

திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்! நின் செங் கமல
இரண்டு அடியான் மூ-உலகும் இருள் தீர நடந்தனையே;
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி; 
மடங்கலாய்! மாறு அட்டாய்! மாயமோ? மருட்கைத்தே!


விளக்கம்:-
                  மேரு மலை வைத்து, வாசுகி என்னும் பாம்பு  கயிராக்கு .  பால் கடலைக் கடைந்து அதன் வயிற்றைக் கலக்கினாயே. அத்தகைய உன் வலிமை அசோதை தயிர் கடையும் கயிற்றால் உன்னைக் கட்டி வைத்து அடித்தபோதும் கட்டுப்பட்டுக் கிடந்தாயே, அந்த மாயமே எங்களை வியப்படையச் செய்கிறது. 



இவன் ஏதுமற்ற பொருள் என்று தேவர்கள் உன்னைப் புகழ்கின்றனர். நீயோ பசி ஒன்றும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் உண்டுவிட்டாய். அது போதாதா  என்று ஆயர்பாடியில் உறியில் வெண்ணெய் திருடி உண்ட வாய் யாசோதேயில் ஒரு வாய் சோற்றுக்கு ஏங்கு உன் இந்த மாயம் எங்களை வியப்படையச் செய்கிறது. 

தேவர்கள் திருமால் என்று உன்னைப் புகழ்கின்றனர். நீ உன் இரண்டு தப்படிகளால் மூன்று உலகையும் அளந்து காட்டினாய். அப்படிப்பட்ட காலடிகள் பஞ்ச பாண்டவருக்குத் தூதாக நடந்து சென்று உன் இரு கால்கள் யாசோதையின் காட்களுக்கு இடையில் சிக்கிய  மாயம் எங்களுக்கு வியப்பாக உள்ளது.


     மூஉலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?

பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே?


மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே?

விளக்கம்:-

   மூன்று உலகங்களையும் இரண்டு அடிகால் அளந்த திருவடி தம்பி  இலட்சுமணனோடு காட்டுக்குச் சென்று இலங்கையில் அட்டுளியம் செய்யும் அரக்கனை அழித்தது  மக்களை காத்த அந்தச் சேவகன் புகழைக் கேட்காத காது இருந்து என்ன காது



 பாலதேவனே உலகை அளந்து மாயங்கள் செய்யும் மாயவனே
 உலகமாக விரிந்துள்ள தாமரை வயிற்றறை உடைய  விண்ணவனை; கண், அடி, கை, வாய் நான்கும் சிவந்திருப்பவனை, கரியவனை, காணாத கண் என்ன கண் 

தாய்மாமன் கம்சனை வதம் செய்து நான்கு திசையும் உன் புகழ் முழங்க செய்தவனே பாண்டவர்களுக்காக
தூதுவனாக நடந்தவனே
 உன் புகழை புகலாத நாக்கு என்ன நாக்கு?


 என்று, யாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம்
ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க! வேத்தர்
மருள, வைகல் வைகல் மாறு அட்டு,
வெற்றி விளைப்பது மன்னோ-
கொற்றத்து
இடிப் படை வானவன் முடித்தலை உடைத்த
தொடித் தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே!

விளக்கம்:-

மாதரி சொல்கிறாள். 

குரவை ஆட்டத்தில் கோத்துப் பாடிய தெய்வம் எங்கள் ஆனிரைகளைக் காக்க வேண்டும். 

வேந்தன் நாள்தோறும் பகைவரை அழித்து வெற்றியை விளைவிக்க வேண்டும். 
என வாழ்த்தினர். 
தன் வெற்றியை நிலைநாட்டத் தேவந்திரன் தலைமுடியில் தன் கை வளையலை உடைத்தவன் தென்னவன் முரசு அப்போது முழங்கிற்று.  

Comments