குறுந்தொகை சங்க இலக்கியம்
ஓதலாந்தையார் என்று புலவர் பாடிய பாடல் -21
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், ''கார்'' எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே.
உரை;-
முல்லை நிலத்தில் வாழும் தலைவி தலைவன் வருவதே என்னி காத்திருக்கிறார்,கார்கலத்தில் வருவேன் என்றார் தலைவர் கார்கலமும் வந்தது, தலைவன் வரவில்லை என்று தோழி கவலைபடுகிறாள், புது புதுகொறறை மலர்களும் மலர்ந்தன அதில் இருந்து தேன் எடுக்கு வண்டுகளும் அதே சுற்றித்திரிகிறது, அதை காணும் போது பெண் ஒருத்தி தன்னோட கூந்தலில் பொனன்னால் ஆன ஆவரனங்களை அணிவது போல தென்பட்டுகிறது ஆகையால் கார் காலம் தொடங்கியது தோழி,
ஆனால் தலைவியோ இதை ஏறக்கவில்லை, தோழி இது கார்காலம் இல்லை எம் தலைவர் பொய் உரைக்கமாட்டார் கார்காலத்துக்குள்ள வந்துவிடுவேன் என்று கூறினார் ஆகையால் கார்காலம் இல்லை,
கார் கால பருவம் வந்தும் தலைவன்
வாரததே என்னி மேகம் மீது கோபம் கொள்ளும் ஆய்ச்சிகள் உண்டு மேகம் கடல்நீர் குடித்து அதிகமானதால் அதை மழையாக கொட்டியது என்றும் அதை அறியாமல் கொன்றை மலரும்,செங்காந்தல் மலரும் மதியிழந்து மலர்ந்துவிட்டது இன்னும் கார்காலம வரவில்லை என்று சொல்லும் காட்சிகளும் உண்டு,
பரணர் என்ற புலவர் பாடிய பாடல் 24
"கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்என்னை இன்றியும் கழிவதுகொல்லோ? ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்குழைய, கொடியோர் நாவே,காதலர் அகல, கல்லென்றவ்வே.
உரை;
அன்று ஒரு நாள் முல்லைநிலத்தில்
இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது தன் கணவர் விரவில்லை என்று கிழத்தி கவலைபடிகிறாள், அந்த நேரத்தில்
வேப்பம் பூவும் பூக்க தொடங்கவிட்டது தலைவனும் வரவில்லை அவர் இல்லாமல் வேப்பபூவும் காய் கனியாக விடும் தருணம் வந்துவிடும் என்று கவலைபட்டுக்கொண்டு உள்ளாள் ஒரு இடைச்சி வேனில் காலம் முடிவதற்குள்ள அவர் வந்துருவார் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே ஊர் காரர்கள் அவர் வர மாட்டார் என்று சொல்லுகிறார்கள் அவர்கள் நாக்கு அழுகி போகட்டும், குளத்தில் கரையில இருக்கிறது அத்திமரம் அதன் கீழே கிடக்கும் அத்திபழத்தை அந்த வழியில போகிற எழு கரடிகள் காலால் மிதித்து அதற் மேலே துர்நாற்றம் அடிக்கும் அளவிற்கு ஊரார் வாய் அழுகட்டும் என்று கிழத்தி சொல்கிறாள்
சிறைக்குடி ஆந்தையார் பாடிய பாடல் 62 குறிஞ்சி தினை பாடல்
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
உரை:-
செங்காந்தள் மலரும் சிறிய செடியில் பூத்த முல்லை பூவும் குவளை மலருந்து இருக்கினறன,
இவைகளை அனைத்தையும் ஒன்றாக தொடுத்த மாலை போல உள்ளது தலைவியின் மேன்மையான உடல் என்று குறிஞ்சி தினையில் , முல்லை மலர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது,
கருவூர்க் கதப்பிள்ளை பாடிய பாடல் 64
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென,
புன் தலை மன்றம் நோக்கி, மாலை
மடக் கண் குழவி அலம்வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர் தோழி! சேய் நாட்டோரே.
உரை :-
அன்று ஒரு நாள் முல்லை நிலத்தில் பொருள் தேடி சென்ற தலைவன் வரவில்லை என்ற கவலையில் இருந்த நேரத்தில் கோவலர்கள் பலவகை பசுகளை மேய்ச்சலுக்கு சென்று மேய்த்துவிட்டு மாலை நேரத்தில் இல்லத்திற்கு பத்திக்கொண்டு வருவார்கள், அது தெரியாமல் கன்றுகள் கத்துக்கொண்டு இருக்கும், அதே போல அதிக. தூரம் சென்ற கணவன் திரும்பி வந்துக்கொண்ட இருப்பார் என்ற நினைத்துக்கொண்டு கவலையில் இருக்கிறார்,முல்லை நிலத்தின் காத்தலும் இருத்தலும் வாழ்க்கைய இருந்த காலம்
இன்புறு துணையொடு மறுவந்து உகள,
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்
வாராது உறையுநர் வரல் நசைஇ
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.
உரை:-
இந்த பாடல் கூறும் கருத்து அழகிய முல்லை நிலத்தை பற்றியும் அதன் அழகும்முல்லை நிலத்தில் ஒரு நாள் இடைச்சி மிகுந்த கவலையில் இருக்கிறாள் காரணம் தன்னோட கணவன் கார்காலம் வந்தும் இன்னும் வரவில்லை என்று கவலையில் இருக்கும் போது அங்கே வந்து ஒரு ஆண் மானும் பெண் மானும் அங்கே இருக்கிற நீரோடையில் தண்ணீர் குடுத்துவிட்டு அவள் முன்னும் பின்னும் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டு இருக்கிற மான்கள் அவளே பார்த்து இன்னுமா உன் கணவன் வரவில்லை என்று கேட்பது போல தெரிந்ததை நினைத்து இன்னும் கவலையில் இருக்கிறால்,
எவ்வளவு இனிமையான வாழ்விடமாக இருந்துருக்கும் ஆய்குடியில் மான்களும் மலர்களும் பறவைகளும் பறந்து விரிந்து இருந்திருக்கும்,
கோவர்த்தனார் பாடிய பாடல் 66
மடவ மன்ற, தடவு நிலைக் கொன்றை
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை, நெரிதரக்
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,
வம்ப மாரியைக் கார் என மதித்தே.
உரை:-அந்தகாலத்தில் கார்காலத்தில் தான் போர் நடக்கும், அப்படி ஒரு நேரத்தில் முல்லை நிலத்தில் கார்காலமும் வந்து விட்டது , என்பதை அறிய மழைகள் கொட்டி தீர்க்க கொன்றை மலரும் தன்னோட இஷ்டத்திற்கு மலர்ந்து இருந்தது, அதை கண்டதிம் ஆய்ச்சியோ கவலை பட்டாள் கார்காலம் முன் வரவேண்டிய கணவர் வரவில்லை என்று, அதை பார்த்த தோழி சொல்கிறார், மழை மதியின்றி கொட்டி விட்டது ஆகையால் கொன்றை மலருக்கு புத்தி கொட்டு போயிவிட்டது, கார் காலம் வருவதற்கு முன்னாடி மலர்ந்து விட்டது, என்று கொன்றை மலரை திட்டிவிட்டு இன்னும் கார்காலம் வரவில்லை என்று சொல்லி ஆருதல் சொல்கிறார்,
இதுவே முல்லை நிலத்தின் வாழ்க்கை அழகாக காட்டுகிறது,
கதக்கண்ணன் பாடிய 94 பாடல்
பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே;
யானே மருள்வென்? தோழி! பானாள்
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும்
என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?
அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலைதரும் குரலே
உரை:-
கார் காலத்திற்குள் வருவேன் என்ற சொன்ன தலைவனும் வரவில்லை மழைகாலத்தில் இடியின் குரல் கேட்கும் போது அவரு என்ன ஆகுவாரே என்ற கவலையில் முல்லை நிலத்தில் இடைச்சி தன்னோட கணவனை என்னி புலம்புகிறாள், இவை தான் முல்லை நில ஆய்ச்சியின் பண்பும் கலக்கமும்,
கோக்குளமுற்றன் பாடிய பாடல் 98
இன்னள் ஆயினள் நன்னுதல்'' என்று, அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,
நன்றுமன் வாழி தோழி! நம் படப்பை
நீர் வார் பைம் புதற் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.
உரை:-
முல்லை நிலத்தில் அது ஒரு அழகிய கிராமம், அந்த கிராமத்தில் கார்காலம் வந்தும் அன்று வரவேண்டிய தலைவன் வரவில்லை என்பதால் ஆய்ச்சி மிகுந்து வேதனையில் இருக்கிறாள், அப்போது தன்னோட தோழியிடம் சொல்கிறாள், அடியே தோழி நீ சென்று என் கணவரிடம் சொல்வாயா உன்னோட தலைவி உன்னை பார்க்காத காரணத்தால் கண்ணீர் சிந்தி அவலோட உடல் பீர்க்கங்காய் பூவின் அரும்பி போல ஆகிவிட்டது, நீ வந்து அவளே பார்ப்பாயா என்று,
மூவாயிரம் ஆண்டுகள் முன்பு முல்லை நிலத்தில் நடந்த ஒரு காட்சி ஆயிரம் ஆண்டுகள் முன்பே வீடுகளில் பீர்க்கங்காய் சாகுபடியும் முல்லைநிலத்தில் நடந்துள்ளது,
ஒளவையார் பாடிய பாடல் 99
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே
உரை:-
முல்லை நிலத்தில் நடந்து ஒரு விசயம்
தலைவி தன்னோட கணவன் மீது உள்ள காதல் எப்படி உள்ளது என்றால் பெரிய மரம் ஒன்றில் அதோட கிளைகளை அடித்து செல்லும் வெள்ளப்பெருக்கம் போகும் அளவிற்கு கணவன் மீது உள்ள காதல் இருக்கிறது, பொருள் தேடி சென்ற தலைவனும் நானும் அவரோட இருந்த நினைவுகளே நினைத்து வாழ்கிறேன் இது தான் உலகில் பண்பு போல என்று ஆய்ச்சி வருந்துகிறால்,
வாயிலான் தேவன் பாடிய பாடல் 108
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல் தோழி! யானே
உரை:-
ஆய்பாடியில் தலைவன் வராத போது இடைச்சி தன்னோட தோழியிடம் வருந்தும் போது,
மேகங்கள் மலையில் மோதி விளையாடுகிறது மழை பொழிய தயாராக இருந்தது அதன் கீழ இருக்க ஆய்பாடியில் பசுகள் நன்றாக மலையில் மேந்துவிட்டு கன்றுகளை பார்க்க வீடு திரும்பி வந்துக்கொண்டு இருந்தது, அந்த நேரத்தில் முல்லை நிலத்தில் முல்லை மலரும் மலரந்து இருந்தது, ஆனால் அந்த ஆயச்சியின் கணவரும் வரவில்லை இப்படி போனால் நான் இறந்துவிடுவேன் என்று தோழியிடம் சொல்லிகிறாள் தலைவி இதுவே முல்லை நிலத்தில் கற்பு
இந்த இடத்தில் புறவின் என்று முல்லை நிலத்தை குறிப்பிடுகின்றன,
கிள்ளிமங்கலம் கிழார் பாடிய பாடல் 110
யார் ஆகியரோ தோழி! நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே,
உரை:-
அவர் வந்தாள் என்னா வராவிட்டால் என்ன தோழி,கார்கால வாடைக்காற்றானது நீரிலே பூத்து இருக்கும் நீல நிற மலர்களை உலுக்கின்றது, தோகை நிரைந்த. மயிலோ புதருகளுக்கிடையில் கண் போன்ற தோகைய மலர்ந்திர்க்கும் கருவிளை பூவை போல உலுக்கிறது,
கூர்மையான இலைமுள்ளோடு இருக்கும் ஈங்கைச் செடியில் செவ்வரும்பு விட்டு வண்ணம் வண்ணமாகப் பூத்திருக்கும் மலர்களை உதிரச் செய்கிறது வாடைக்காற்று,
இப்படி எல்லாம் வீசும் காற்றில் அவள் எப்படி இருப்பாள் என்று கூட நினைவில்லாமல் இருப்பவர் என் தலைவர், அவர் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன என்று கோபத்தில் முல்லை நில இடைச்சி சொல்கிறாள்
குன்றியனார் பாடிய 117 பாடல்
இந்த பாடல் நெய்தல் நிலம்
இந்த பாடல் அண்டர் என்னும் ஆயர் பற்றிய ஒரு வரியில்,
கொக்கு ஒன்று நண்டை பிடிக்க காத்திருக்கிறது, அப்போது ஆயரினால் கயிற்றால் கட்டப்பட்ட எருது கத்துவது போ கடல் அழைகள் முழங்குகிறது, என்று கூறியுள்ளனர்,
ஒக்கூர் மாசாத்தி பாடிய பாடல் 126
இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?'' என,பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே தோழி! நறுந் தண் காரே.
உரை:-
தலைவி கூறுகிறால் தோழியிடம்
கார்காலம் வந்து விட்டது மழை பேய்ந்து முல்லை மலரும் மலர்ந்து விட்டது, அது என்னை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்கிறது இளமையே எண்ணி பார்க்காமல் உன்னை விட்டு சென்று விட்டார், பொருள் தேடி சென்றுவிட்டார் எங்கே இருக்கார் என்று கூட தெரியவில்லை என்று என்னைய பார்த்து சிரிக்கிறது,
இளங்கீரந்தையார் பாடிய பாடல் 148
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக்
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும்,
''கார் அன்று'' என்றிஆயின்,
கனவோ மற்று இது? வினவுவல் யானே.
உரை:-
முல்லை நிலத்தில்
அன்று பருவம் கண்டு நிகழ்ந்தது
தவளை வாய் ஒலிப்பது போல கிண்கிண் என்று சலங்கே கேட்கும் அதை செல்வச்சிறுமியர்கள் தன் காலில் அணிந்துருப்பார்கள், அதே போல கொன்றை பூ மலர்ந்து குருந்தம் பூவோடு பூத்திருக்கிறது, இதே நீ கார்காலம் என்று சொல்கிறாய் ஆனால் என் கணவரும் விரவில்லை அப்படி என்றால் நம்ம பார்ப்பது என்ன கணவா என்று தலைவி சொல்கிறாள்,
தலைவன் வார்த்தை நம்ப இழலாமல் கூறும் வரிகள்,
உரோடகத்துக் கந்தரத்தன் பாடிய 155 பாடல்
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே; ''மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு,
மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும்'' என்னும் உரை வாராதே
உரை:-
முல்லை நிலத்தில் தலைவியின் கூற்று
உழவரோ விதைய விதைத்து விட்டு மலரும் மலர்ந்து விட்டது அதையும் அவர் கூடையில் வைத்து வருகிறார், தட்சன் தன்னோட உலையில் மெழுவை வைத்து உறுவாக்கிய மணியே ஆநிரையின் கழுத்தி தொங்க விட்டு வரும் ஒலியோ கேக்கிறது, இன்னும் அவரின் தேரீன் மணிஓசை கேட்கவில்லையே என்று வருந்துகிறாள்
,
கருவூர்ப் பவுத்திரன் பாடிய 162 பாடல்
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை! வாழியோ, முல்லை! நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று இது தமியோர் மாட்டே?
உரை;-
முல்லை நிலத்தில் முல்லை நில தலைவி கூறிக்கொள்வது,
மாலை நேரத்தில் ஆநிரைகள் எல்லாம் வீடு திரும்பிகிறது, கார்காலத்தில் பொய்த மழையினால் முல்லை நிலத்தில் முல்லை மலர்கள் மலர்ந்து அவைகள் என்ன பார்த்து சிரிப்பது போல பூத்து உள்ளது, அது என்னைய பார்த்து சிரிப்பது போல தோண்றுகிறது, என்னை சூடிகொள்ள மாட்டேன் என்று முல்லை மலரே இது உனக்கு தகுமா என்று முல்லை நில தலைவி தலைவன் வாரததை நினைத்து கவலையில் இப்படி என்னிகிறாள்,
அம்மூவன் பாடிய நெய்தல் தினை பாடல்163
பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.
உரை;-
பூழியர் அதாவது இடையர் மேய்க்கும் வெள்ளாடு போல பாய்கிறாய் என்ற கடல் அலைகளை கூறியது
கூடலூர் கிழார் பாடிய பாடல் 167
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
''இனிது'' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே,
உரை;-
முல்லை நில தலைவியின் காதல்,
அன்று ஒரு நாள், கணவனுக்காக இடைச்சி சமைக்கிறாள் அதோட காட்சியா காணுவோம்
காந்தள் மலர்போல சிவந்த கையால் நன்றாக மோரை கலக்கிறாள் அப்போது அவளோட மேனியில் இருத்து ஆடை நழுவுகிறது, அதை தன்னோட ஈரகையால் அந்த மென்னிய ஆடைய சரி செய்து, எண்ணெய் ஊற்றி மோர் குழம்பை தாளிக்கிறாள் இடைச்சி,அதில் ஏற்படும் புகை குவளை பூ போன்று இடைச்சியின் கண்ணில் பட்டு கண்கள் எரிகிறது,அதையும் பொருட்படுத்தாமல் தன் கணவனுக்கு புளித்த போர் குழம்பை சமைத்து குடுக்கிறாள்,அதை ஆயன் சாப்பிடும் போது அதோட சுருசியாள் ஆவ்வாயன் ஆகா ஓகோ இனிது என்று ருசித்து சாப்பிடும் போது இடைச்சியின் முகம் முல்லை மலர் போல மலர்கிறது
ஔவையார் பாடிய பாடல் 183,
''சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம் போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன் புல வைப்பிற் கானத்தானே.
உரை:-
முல்லை நிலத்தில் பொருள் தேடி சென்ற தலைவனை நினத்து தலைவி நினைவு
கணவர் செல்லும் தேசத்தில் கொன்றை மலர்கலும் மலர்ந்து இருக்கும் அதை காணும் போது எனது மேனியும் அதை போல கருமஞ்சல் நிறம் போல இருக்கும் என்பது அவருக்கு தோணாதா, அவர் செல்லும் வழியில் பெண் மானை விட்டு ஒடிய ஆண் மானை காண மாட்டாரா அதை கண்டு திரும்பி வரமாட்டாரா, அவர் காட்டுவழியிலே பொருள் தேடி செல்கிறார் அங்கே மயில் இருக்கும் கிடக்கும் காந்தாள் மலரும் மலர்ந்து இருக்கும் இதை கண்டும் வாரமாட்டாரா என்று இடைச்சி ஏங்குகிறாள்,இதுவே முல்லை நிலத்தில் காதல்,
ஒக்கூர் மாசாத்தி பாடல் 186
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால் தோழி! எம் கண்ணே
உரை :-
முல்லை நிலத்தின் காதல்
மழைகாலத்தில் முல்லை மலர்கள் மலர்ந்து தன்னோட வெண்மையான பற்களை காட்டி புன்னைகைக்கும் நாட்டின் தலைவன் என் காதலர் அவரை காணமல் என் உள்ளம் உறங்க மறுக்கிறது தோழி நான் என்ன செய்வேன் என்று காதலை காட்டுகிறது,
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடல் 188
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே
உரை;-
முல்லை நிலத்தில் அவ்வூரின் தலைவியின் காதல்
முல்லை மலரும் மலர்ந்து முற்று விட்டது, காட்டிலோ கார்த்திகையில் பூக்கும் காந்தாள் மலரும் மலர்ந்து முற்றிவிட்டது, என் அணிகழன்களை கலட்டும் அவர் மட்டும் இன்னும் வழவில்லையே என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள், இதுவே முல்லை நிலத்தில் இருந்தல் இருந்தலும் குறிக்கிறது,
பூதம்புல்லன் பாடிய பாடல் 190
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி தோழி! பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே?
உரை;-
முல்லை நில இடைச்சியின் மனம்பொருள் தேட சென்ற எம் தலைவர் காட்டில் வழியே செல்வார் அவர் செல்லும் வழியில் பாம்பின் தலை தரையில் விழும் போது ஏற்படும் சத்தம் போல தொழுவத்தில் கட்டிய பசுகளின் கழுத்தில் இருக்கும் ஒலிகள் கேட்டுக்கொண்டே இருக்கும் அதன் சத்ததில் நான் உறங்க மாட்டேன் என்று அவருக்கு தெரியும் வளையல்கள் அசையும் சத்தம் கேட்கும்படி என்னை விட்டுவிட்டு சென்றிவிட்டார்
இந்த இடத்தில் வளையல்கள் சத்தம் கேட்கும் படி என்றால்
தூங்காமல் அங்கும் இங்கும் பிரலும் போது ஏற்படும் சத்ததை கூறிக்கிறது,
தோழிக்குக் கிழத்தி பாடிய பாடல் 191
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், ''போதின்
பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல்'' என்குவெம் மன்னே
உரை;-
முல்லை நிலத்தில் இடைச்சியின் கோவம்தோழி அங்கே பார் பூவின் முட்டில் வண்டு ஒன்று இருந்துகொண்டு தன்னோட துணைவிய அழைக்க சத்தம் இடுகிறது,
என்னவர் திரும்பி வந்தால் நான் சொல்வேன் அவரிடன் என் கூந்தலை ஒன்றும் தடவ வேண்டாம் கூந்தலில் பூ ஒன்றும் சூட வேண்டாம் என்று, என் நினைப்பு இல்லாமல் பிரிந்து பொருள் தேடி சென்றார் அல்லவா
அரிசில் கிழார் பாடிய பாடல் 193
''மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன் எம் தோளே;
இன்றும், முல்லை முகை நாறும்மே.
உரை;-
தோழியே உன் மேனி மனக்கிறதே சென்ற மாதம் முழுநிலவில் முல்லை மலரை அணிந்துகொண்ட என்னவர் என்னை தழுவினார் அந்த மனம் இன்னும் போகவில்லை , தேன் உற்றி வைத்து இருக்கும் கலையம் போல நீர் நிரைந்து இருக்கும் மலை ஊற்றில் இருக்கும் தவளை தட்டையில் இருந்து வரும் சத்தம் போல எழுப்பும் நாட்டின் தலைவன் அவர் என்று முல்லை நில இடைச்சி கூறுகிறார்,
கோவர்த்தனார் பாடிய பாடல் 194
''என் எனப்படுங்கொல் தோழி! மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்;
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?
உரை;-
முல்லை நிலத்தில் ஆய்ச்சி நிலைபாடு
வானமோ மழைய பொழிய மின்னலுடன் இடிய முழங்கிறது, அதை எதிர்நோக்கி மயில் தன்னோட தோகைய ஆட்டுகிறது, இதை கண்ட எனது உள்ளமோ பதருகிறது, இதை எதை காட்டுகிறது கார்காலத்தையே அவரோ கார்காலம் முன்பு திரும்பி வருவேன் என்றாரே
ஒளவையார் பாடிய பாடல் 200
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து,
இழிதரும் புனலும்; வாரார் தோழி!
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே
கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.
உரை;-
முல்லை நிலம் அதோட அழகு அதிலும் இடைச்சி அழுகும்சேர்ந்து
அன்று ஒரு நாள் இடைச்சி ஆய்பாடியில்
மேகங்கள் மழைய பொழிந்து அவைகள் குன்றுகளில் நிரம்பி பாறையில் அருவியாய் கொட்டுகிறது கொட்டும் போது மழை சாரலில் பூவின் மனமும் காற்றில் வருகிறது, இடியோசையிம் இனிமையாக ஒலிக்கிறது , கார்காலம் நெருங்கிவிட்டது, அதற்கு முன்பு வந்துவிடுவேன் என்றார் இன்னும் வரவில்லையே என்று இடைச்சி தன்னோட தோழியிடம் கூறுகிறார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
பாடல் 210
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே
உரை;-முல்லை நிலத்தில் பசுக்கள் நிரைந்தது அவ்வூர்,
அவ்வூரில் இருக்கும் தலைவி தன்னோட தோழியிடம் என்னவரை காணமல் தோள் மெலிந்து வாடுகிறேன்,என்று கூறும் போது காக்கை கரைகிறது,அதை கண்ட இடைச்சி காக்கை கரைந்தால் விருந்தினர் வருகிறார்,
என்னவர் தான் தான் வருகிறார் என்ற செய்திய காக்கை சொல்கிறது, இப்படி ஒரு நல்ல செய்திய சொல்லும் காக்கைக்கு நாம் என்ன செய்யலாம்,
இடையர் வந்ததும் திடமான தேரினை உடையவர் நள்ளி அவரின் காட்டில் வாழும் பசுவில் பால் பீச்சி அதில் இருந்து நெய் எடுத்து, தொண்டியில் விளைந்த நெல்அரிசியில் சொறாக்கி அதை செய்யில் பிசைந்து அதை ஏழு பாத்திரங்களில் வைத்து அக்காக்கைக்கு குடுக்க வேண்டும் அப்படி செய்தால அவை சிறிதளவு அக்காக்கைக்கு கைமாரு செய்ததாக இருக்கும்
நள்ளி என்பவன் கடேயேழு வள்ளல்களில் ஒருவன், அவன் நாட்டில் வாழும் பசுக்கள் பாலின் பெருமையும், தெண்டி ஊரில் விளையும் அரிசிக்கு அவ்வளவு மதிப்புள்ளது, என்பதை சொல்கிறது,
ஒக்கூர் மாசாத்தி பாடிய பாடல் 220
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின் தோழி! பொருட் பிரிந்தோரே.
உரை;-
மழைகாலம் முடிந்த பிறகு முல்லை நிலத்தில் வரகு விளைந்துருக்கிறது அதை மேய்வதற்கு ஆண் மான் வரகு கதிர்களை மேய்கிறது,அதனால் கதிர்கள் குன்றி தெரிகிறது, அதன் அருகிலே மலர்ந்த முல்லை மலர்கள் அதை பார்க்கும் போது காட்டுப்பூனைகள் சிரிக்கும் போது அதன் பற்கள் போல சிறிய அரும்புகளுடம் முல்லை மலர் பூத்துருக்கிறது,அம்முல்லை நிலத்தில் சிறிய இதழ்கள் போன்ற மலர்களில் தேன் எடுக்கு வண்டுகள் சுற்றி சுற்றி வருகிறது, ஆனால் என் தலைவரோ என்னை சுற்றிவர இன்னும் வரவில்லையே என்று மனம் ஏங்குகிறது,
பேயன் பாடிய பாடல் 233
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி,
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே.
உரை;-
முல்லை நில ஆயன் கூற்று
என் காதலியோ அவள் கையில் சிறிய ஆழகான வளையல்கள் அணிந்துருப்பாள் அவளின் தந்தை பெரிய செல்வந்தர்,உயர்நத பண்புகள் உடையவர்களுக்கு நீருடன் செல்வத்தையும் சேர்ந்து குடுத்தது போக மீதம் உள்ளதை எல்லாருக்கும் குடுத்து உதவும் ஊர் அந்த ஊர்
அவ்வூர் முல்லை நிலத்தில் இருக்கிறது, இவ்வூரில் சிறுவர்கள் விளையாடும் போது ஏற்படும் குன்றுகளில் உதிர்ந்து கிடக்கும் கொன்றை மலர் போல அவளின் தந்தையில் பொன்னிகள் (தங்கம் போனற) பெட்டிகள் திறந்தே இருக்கும் அப்படி பட்டி வள்ளல் அவளின் தந்தை
மிளைப்பெருங்கந்தன் பாடிய பாடல் 234
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
முல்லை நிலத்தில்
மாலை நேரத்தில் கதிரவன் மறையும் போது வானமே சிவந்த நிலையில் இருக்கும் அதை தான் காதலர்களை மயக்கும் மாலை நேரம் என்பார்கள், முல்லை பூ மலர்ந்தால் மாலை என்பார்கள் உண்மையில் அது மாலை ஆகாது கணவனை பிரிந்த நிலையிலும் கூட. காலையில் சேவல் கூவும் போது வானம் சிவந்து தான் இருக்கும் காலை பொழுதும் மாலை பொழுதாக தான் இருக்கும்
என்று முல்லை நிலத்தில் தலைவி தோழியிடம் சொல்லு ஆருதல் அடைகிறார்
கொல்லன் அழிசி பாடிய பாடல் 240
என் காதலியோ அவள் கையில் சிறிய ஆழகான வளையல்கள் அணிந்துருப்பாள் அவளின் தந்தை பெரிய செல்வந்தர்,உயர்நத பண்புகள் உடையவர்களுக்கு நீருடன் செல்வத்தையும் சேர்ந்து குடுத்தது போக மீதம் உள்ளதை எல்லாருக்கும் குடுத்து உதவும் ஊர் அந்த ஊர்
அவ்வூர் முல்லை நிலத்தில் இருக்கிறது, இவ்வூரில் சிறுவர்கள் விளையாடும் போது ஏற்படும் குன்றுகளில் உதிர்ந்து கிடக்கும் கொன்றை மலர் போல அவளின் தந்தையில் பொன்னிகள் (தங்கம் போனற) பெட்டிகள் திறந்தே இருக்கும் அப்படி பட்டி வள்ளல் அவளின் தந்தை
மிளைப்பெருங்கந்தன் பாடிய பாடல் 234
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே:
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை துணை இலோர்க்கே.
உரை:-
மாலை நேரத்தில் கதிரவன் மறையும் போது வானமே சிவந்த நிலையில் இருக்கும் அதை தான் காதலர்களை மயக்கும் மாலை நேரம் என்பார்கள், முல்லை பூ மலர்ந்தால் மாலை என்பார்கள் உண்மையில் அது மாலை ஆகாது கணவனை பிரிந்த நிலையிலும் கூட. காலையில் சேவல் கூவும் போது வானம் சிவந்து தான் இருக்கும் காலை பொழுதும் மாலை பொழுதாக தான் இருக்கும்
என்று முல்லை நிலத்தில் தலைவி தோழியிடம் சொல்லு ஆருதல் அடைகிறார்
கொல்லன் அழிசி பாடிய பாடல் 240
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி,
வாடை வந்ததன் தலையும், நோய் பொர,
கண்டிசின் வாழி தோழி! தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.
உரை:-
முல்லை நிலத்தில் தலைவியின் மனம்
பனியில் பூக்கும் அவரை கிளியில் வாய் போல தோற்றத்துடன் மலர்ந்துள்ளது, முல்லை நிலததில் காட்டு பூனை போன்று முல்லை மலர்களும் மலர்ந்து இருக்கிறது, அவற்றின் மீது பட்டு வாடைக்காற்றும் வீசுகிறது, தோழி அங்கே பார் கடலில் மூழ்கும் கப்பல் போல கதிரவனும் மலையில் மறைகிறான், என் கணவரை தேடி என் மனம் ஏங்குகிறது,
என்று முல்லை நில காதல் இன்னும் நெஞ்சில் இருக்கிறது
குழற்றத்தன் பாடிய பாடல் 242
கானங்கோழிக் கவர் குரற் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்,
சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே.
உரை;-
முல்லை நிலத்தில்
தலைவி தன்னோட கணவன் இல்லாத துன்பங்களுடன் வாழ்கிறாள் ஆனால் அதுக்காக அதிலே முடங்காமல் வழ்ந்து தான் இடைச்சியினு கணவன் அந்நாட்டு அரசன் ஆணைப்படி போருக்கு சென்று விட்டான், அவன் வேகமாக திரும்பி வருவான் என்ற நிலையே என்னி வாழ்கிறாள்,
இரட்டை குரல் எழுப்பும்
காட்டுகோழி முல்லை மலரில் இருந்து விழும் பனிதுளிகளை உதிரும் அதை உதரி தள்ளிவிட்டு வாழும் முல்லை நிலம் அவ்வூர் அதே போல துன்பங்களை உதரிதள்ளி விட்டு வாழ்கிறாள் தலைவி
இடைக்காடர் பாடிய பாடல் 251
மடவ வாழி மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்தென, அதன் எதிர்
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன;
கார் அன்று இகுளை! தீர்க, நின் படரே!
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்,
புது நீர் கொளீஇய, உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே
உரை;-
முல்லை நில தலைவி தலைவன் கார்காலத்தில் வந்துவிடுவேன் என்று கூறிய காலம் வந்தது அதை என்னி தலைவி வருந்துகிறாள்,அதை அறிந்த தோழி,
அன்பு தோழியே
மேகம் புதிய நீர் மீது ஆசை கொண்டு பழைய நீரை கொட்டிவிட்டது, அதை அறியாமல் மயில்களும் புத்தி இல்லாமல் அதில் ஆடவும் செய்கிறது,
மடதனமாக காட்டுமல்லியும் பூத்துவிட்டது, மேகத்துக்கோ பகை வான்த்தின் மீது அதனால் மோதி இடி இடிக்கிறது, நீ அதை என்னி கலங்காதை என்று தலைவியிடம் கூறிகிறாள் தோழி,
பாண்டியன் பன்னாடு தந்தான் பாடிய பாடல் 270
தாழ் இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்! யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந் தாள் நாள்மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.
உரை:-
மழைய கொட்ட. வானம் ஆய்தமாகிவிட்டது இருளை கிழக்கிறது மின்னல், மேகங்கள் இடிய முழங்குட்டும் மழை மொழியட்டும்
நானும்
என்னோட கடமை முடிந்து விட்டேன்,
இனி நான் செல்கிறேன்
குவளை மலர் மனக்கும் என்னவளின் கூந்தலில் நான் தலைய வைத்து மேத்தை போல உறங்குவேன்,
என்று ஆயர் தன்னோட மனைவி மீது உள்ள காதலை உரைக்கிறார்
ஒக்கூர் மாசாத்தி பாடல் 275
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ தோழி!
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்? ஆண்டு இயம்பிய உளவே.
உரை:-
முல்லை நிலத்தில், தலைவி தோழியிடம்தோழி மணி ஓசை கேட்கிறது, மாலை நேரந்தில் ஆநிரைகள் வருவதா இல்லை வில் ஏந்திய வீரர்கள் வரும் ஓசையா என்று முல்லை மலர் பூத்திருக்கும் பாறை மீது ஏறி பாக்கலாம் வா என்று தலைவி தோழிய அழைத்து செல்கிறாள்
மதுரை மருதன் இளநாகனார் பாடல் 279
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார் கொல்லோ
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?
உரை:-
தொழுவத்தில் இருக்கும் முருக்கிய கொம்புகள் உடைய எருமையின் கழுத்தில் இருக்கும் மணி அல்லவா கேக்கிறது, அவர் வரும் தேரின் மணிஓசை கேட்கவில்லையே,
மழை துளிகள் கூட நுளையா முடியாமல் அங்கே இருக்கும் பாறைகள் கழுவாமலும் தூசிகள் நிறைந்த பாறைகள் இருக்கும் காட்டு பாதையில் கடந்து வருவார் நள்ளிரவாகியும் அவர் இன்னும் வரவில்லையே, என் தோளில் நினைப்பு தான் அவருக்கு வரவில்லையோ
என்று தலைவி தலைவனை நினைத்து வருந்துகிறாள்
கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடல்
287
அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு,
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,
செழும் பல் குன்றம் நோக்கி,
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே?
உரை :-
முல்லை நிலத்தின் தலைவி தோழியிடம் கூறுவது,கருவுற்ற ஒரு தாய் ஏழு மாதம் நிரம்பிய பிறகு அவளின் நாக்கு புளிப்புகளை தேடும் அப்புளிப்பிற்காக. தன்னோட பிள்ளையே வயிற்றில் சுமந்துக்கொண்டு புளிப்பே தேடுவாள் கருவுற்ற தாய் அதே போல மேகங்கள் தண்ணீரை சுமந்து கொண்டு மலை குன்றுகளை தேடி வானத்தில் அழைந்துகொண்டு இருக்கிறது, இந்த கார்கால மேகங்களை கண்டதும் திரும்பி வருவேன் என்று சொன்னாரே அவரை இன்னும் காணவில்லையே
என்று தலைவி வருந்துகிறார்,
முல்லை நிலத்தில் வாழ்க்கை முறை
பாடியவர் பெயர் இல்லை 289 பாடல்
வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய்,
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்,
மழையும் தோழி! மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக் கண்ணும்,
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.
உரை:-
தலைவியின் கூற்று,
வளர்பிறை போன்று கவலைகள் பெருகி கொண்டே போகிறது,தலைவி நான் அவரின் வருகையி நோக்கி நோந்துக்கொண்டு இருக்கேன், என் நிலைய என்னி ஊரார்களும் வருந்துகின்றன, பரிக்கப்பட்ட கீரைய சமைக்காமல் வாடுவது போல என்னோட துன்பமும் வளையல்கள் கையில் இருந்து கழலும் அளவிற்கு வளர்பிறை போல பெருகிகொண்டே உள்ளது, கார்காலம் எப்போ வரும் என்று ஏங்கி கொண்டு இருந்தேன் அதுவும் வந்தது ஆனால் என்னவர் தான் வரவில்லை என்று தன் தோழியிடம் இடைச்சி சொல்கிறால்,
இந்த முல்லைநிலம் ஒரு சிற்றரசாக இருந்திருக்கனும், ஆகையால் தான் அரசியின் துன்பத்தை கண்டு மக்களும் வருத்தமடைகிறார்கள்,
பேரிசாத்தன் பாடல் 314
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப,
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,
வாரார் வாழி! தோழி! வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே,
உரை:-
முல்லை நிலத்தில் கணவன் வருவதை எண்ணி இடைச்சி தன்னோட தோழியிடம் சொல்கிறாள், இன்பம் தரும் என்னோட மார்பகத்தையும் என்னையும் விட்டு துன்பம் தரும் பொருள் தேடி சென்றுள்ளார், வானத்தில் மேகங்கள் நீரை சுமந்து வலியினால் இடிய இடித்துக்கொண்டும் மின்னலை மின்னிக்கொண்டும் கார்மேகம் வானத்தை மூடி மழை பொழிய. ஆயிதமாகிறது,ஆனால் அதற்கு முன் வருவேன் என்று சொன்னவர் இன்னும் வரவில்லையே தோழி
என்று இடைச்சி வருந்துகிறாள்,
தாயங் கண்ணன் பாடல் 319
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர் நிலையே,
உரை:-
முல்லை நிலத்தில் கிழத்தி தோழியிடம்
தோழி மாலை நேரத்தில் மழை காலத்தில் ஆண் மான் பெண் மான் மீது காதல்
கொண்டு புதருகளுக்குல் சென்று தன்னோட இல்லறவாழ்வை தொடங்கிவிட்டது, காடுகளே அதிரும் பிளிரும் ஆண் யானை தன்னோட துனைவியான பொண்யானைய தன்னோட கையால் தழுவிக்கொண்டே மலைக்கடியில் தன்னோட இல்லறத்தை தேடி சென்றுவிட்டது, பொன் போன்ற என்னோட மேனியோ என்னவர் இல்லாமல் சிதைகிறது, மாரிகாலமும் தொடங்கிவிட்டது மாலை நேரமும் வந்து விட்டது என்னை தழுவ அவரும் வரவில்லையே?
கொண்டு புதருகளுக்குல் சென்று தன்னோட இல்லறவாழ்வை தொடங்கிவிட்டது, காடுகளே அதிரும் பிளிரும் ஆண் யானை தன்னோட துனைவியான பொண்யானைய தன்னோட கையால் தழுவிக்கொண்டே மலைக்கடியில் தன்னோட இல்லறத்தை தேடி சென்றுவிட்டது, பொன் போன்ற என்னோட மேனியோ என்னவர் இல்லாமல் சிதைகிறது, மாரிகாலமும் தொடங்கிவிட்டது மாலை நேரமும் வந்து விட்டது என்னை தழுவ அவரும் வரவில்லையே?
என்று முல்லைநில கிழத்தி கூறுகிறாள்,
எல்லாம் எவனோ பதடி வைகல்
பதடி வைகலார் பாடிய பாடல் 32
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள் அணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளே,
உரை:-
முல்லை நில தலைவன் போர் முடிந்து தேர்பாகனுக்கு சொன்னது,
முல்லை நிலத்தில் இருக்கிறாள் என்னோட மனைவி அவள் மழைகாலத்தில் பூத்திருக்கும் மல்லிகை மலர் போல மென்மையான உடலமைப்பை கொண்டவள் என்னோட மனைவி, நெல்களில் வீணாபோன நெல்கள் போல அவளை தழுவாமல் நாட்களை வீசாக்கிவிட்டேன், பாணர்கள் பறையில் எழுப்பும் ஓசை போல இடிகள் இடித்து ,மழை பொழியும் காலத்தில் முல்லை மலர்கள் மலர்ந்து வரம் மனம் போல அவள் முகம் பிரகாசிக்கும், சீக்கரம் செல்வாயாக அவள் எனக்காக காத்திருப்பாள் என்று தேரோட்டியிடம் கூறுகிறார்,
குறுங்குடி மருதன் 344 பாடல்
உரை:-
பாலை தினை பாடல் 348
கானத்துப்
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்
தண் துளிக்கு ஏற்ற பைங் கொடி முல்லை
முல்லை நிலத்தில் தலைவன் வருகைய என்னி
தோழி தலைவியிடம்
குழுமையான பனி சாரல் மழைதுளிகள் பட்டு முல்லை மலர் முட்டுகள் விரிந்துவிட்டது ஆகையால் நற்மனம் வந்துவிட்டது புதர்பூவும் தவளம் பூவோட் சேர்ந்து நற்மனம் மனக்கும்படி மழைத்துளிகள் பொழிந்து விட்டது,
இவை நம்மை வம்புக்கு இழுக்கும் கார்காலத்தின் தொடக்கம் உண்மையான கார்காலம் இது இல்லை உண்மையான மழைகாலம் என்றால் இன்னியாரம் அவர் வந்துருப்பார்,என்று தோழி கூறிகிறாள்
கங்குல் வெள்ளத்தார் பாடல் 387
எல்லை கழிய, முல்லை மலர,
முல்லை நிலத்தில் தலைவியின் கூற்று
தோழியிடம் வெளிச்சம் மறைந்து விட்டது முல்லையும் மலர்ந்து விட்டது கதிரவனின் சினம் தனிந்த மாலை நேரம் நான் என்னோட உயிரை பிடித்துக்கொண்டு மாலைக்காலம் என்னும் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு இருக்கிறேன் எனக்கு மட்டும் இரவு கடலை விட பெரிதாக இருக்கிறது, எப்போது என்னவர் வருவார் என்று தெரியவில்லையே
குறுங்குடி மருதன் 344 பாடல்
நோற்றோர் மன்ற தோழி! தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து,
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப்
பிரிந்து உறை காதலர் வர, காண்போர.
உரை:-
முல்லை நிலத்தில் இடைச்சி தோழியிடம் பனி காலங்களில் பசு தன்னோட துனையான காளையுடன் கானத்துக்கு சென்று இறை மேய்யும் தன்னோட மடியில் பால் அதிகமானால் தன்னோட கன்றுக்கு பால் குடுக்கு அங்கே அதோட மேய்ந்துகொண்டு இருக்கும் காளையையும் தன்னோட இனத்தையும் விட்டு விட்டு தனியே கன்றிடம் செல்லும் இப்படி பொருள் தேடி சென்ற என்னோட கணவர் திரும்பி வருவதை என்னி உள்ளேன்,
பாலை தினை பாடல் 348
கானத்துப்
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்,
உரை:-
பாலை நிலப்பாடல் காட்டின் வழியே செல்லும் போது அங்கே யானையின் கொம்பில் சிக்கி முல்லை மலர் கீழே கிடக்கும் அதை போல என் கண்ணீர் கிடக்கும் என்பது அவரின் நினைவுக்கு வராதா என்று வருந்துகிறாள் பாலையி நிலத்தி தலைவி,
மருதநில தினை பாடல்358
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்
பல் ஆன் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.
உரை:-
மருதநிலத்தில் தோழி முல்லை நில மக்கள் வாழக்கை பற்றி சொல்லியது
கோவலர்கள் அதாவது ஆயர்கள் ஆநிரை அல்லது பொருள் தேடி சென்ற போது முல்லை நிலத்தில் இடைச்சி இவர்களின் பிரிவை என்னி துன்பத்தில் இருப்பாள் அப்போது மாலை நேரத்தில் கோவலர் முல்லை மலரை சூடிக்கொண்டு வருவார், அதை போல உன்னோட கணவனும் வருவான் கொஞ்சம் சிரிப்பாயாக என்று தொழி தேற்றுகிறாள்,
கோவலர்கள் அதாவது ஆயர்கள் ஆநிரை அல்லது பொருள் தேடி சென்ற போது முல்லை நிலத்தில் இடைச்சி இவர்களின் பிரிவை என்னி துன்பத்தில் இருப்பாள் அப்போது மாலை நேரத்தில் கோவலர் முல்லை மலரை சூடிக்கொண்டு வருவார், அதை போல உன்னோட கணவனும் வருவான் கொஞ்சம் சிரிப்பாயாக என்று தொழி தேற்றுகிறாள்,
குறுங்கீரன் பாடல் 382
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல,
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின்,
வாராரோ, நம் காதலோரே
உரை :-
தோழி தலைவியிடம்
குழுமையான பனி சாரல் மழைதுளிகள் பட்டு முல்லை மலர் முட்டுகள் விரிந்துவிட்டது ஆகையால் நற்மனம் வந்துவிட்டது புதர்பூவும் தவளம் பூவோட் சேர்ந்து நற்மனம் மனக்கும்படி மழைத்துளிகள் பொழிந்து விட்டது,
இவை நம்மை வம்புக்கு இழுக்கும் கார்காலத்தின் தொடக்கம் உண்மையான கார்காலம் இது இல்லை உண்மையான மழைகாலம் என்றால் இன்னியாரம் அவர் வந்துருப்பார்,என்று தோழி கூறிகிறாள்
கங்குல் வெள்ளத்தார் பாடல் 387
எல்லை கழிய, முல்லை மலர,
கதிர் சினம் தணிந்த கையறு மாலை,
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல் வாழி? தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!
உரை:-
தோழியிடம் வெளிச்சம் மறைந்து விட்டது முல்லையும் மலர்ந்து விட்டது கதிரவனின் சினம் தனிந்த மாலை நேரம் நான் என்னோட உயிரை பிடித்துக்கொண்டு மாலைக்காலம் என்னும் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு இருக்கிறேன் எனக்கு மட்டும் இரவு கடலை விட பெரிதாக இருக்கிறது, எப்போது என்னவர் வருவார் என்று தெரியவில்லையே
பொன்மணியார் பாடல் 391
உவரி ஒருத்தல் உழாஅது மடியப்
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்,
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய,
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே;
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலை,
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம்நீர் நனந்தலை புலம்பக்
கூஉம் தோழி! பெரும் பேதையவே!
உரை;-
முல்லை நிலத்தில் தலைவி தோழியிடம்
நெடுநாடுகளாக காளைய கொண்டு உழவு செய்யாமல் கிடக்கும் உப்புகலந்த கரம்பு மணல் இம்முல்லை நிலத்தில் புழுங்கி கிடக்கும் நிலத்தில்,
பாம்பு படம் எடுத்து ஆடுவது போல மின்னல் மினிக்கிறது,
அத்துடன் இடியும் இடிக்கிறது மழையும் பொழிகிறது, வருவேன் என்று சொன்ன கார்காலமும் வந்துவிட்டது, என்னவரும் வரவில்லையை நான் என்ன செய்வேன் தோழி அங்கே பார் மயில் மலர்கள் பூத்திருக்கும் கிளையில் இருந்து நீரில் தாவி தன்னோட துணை தேடி அழைகிறது, இதை போய் கார்காலம் என்று சொல்கிறாயே, நீ ஏன் இப்படி பிதட்டுகிறாய் என்று தலைவிய பார்த்து தோழி சொல்கிறாள்,
பேயனார் பாடிய பாடல் 400
முல்லை நிலத்தில்
தலைவின் தேர்பாகனிடம் நன்றியு உரைக்கிறான்,
தேர் பாகனே நான் அன்று போருக்கு செல்லும் போது என் மனைவி கேட்டால் நெடும்தூரம் போரிங்களா என்று வினாவினாக் இல்லை பக்கம் தான் என்றேன் அத்துடன் கவலை வேண்டாம் உன் தோளில் உள்ள காமத்தை இன்றையே போக்குவேன் என்று இன்றைய தினத்தை கூறியதாக மனதில் நினைத்துக்கொண்டு,
தேர்பாகனே நன்றாக தேரோட்டினாய் காடுகளை கடந்தாய் காடுகளில் இருக்கும் மேட்டுகளை உடைத்தாய் வண்டல் மணல்களில் புதிய பாதைய உண்டாக்கி ஓட்டினாய் இப்படி திறமையான தேரோட்டிய என்று கூறுகிறார் தலைவர்
பேயனார் பாடிய பாடல் 400
சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று,
களைகலம் காமம், பெருந்தோட்கு'' என்று,
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி,
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப்
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்!
இன்று தந்தனை தேரோ
நோய் உழந்து உறைவியை நல்கலானே?
உரை:-
தலைவின் தேர்பாகனிடம் நன்றியு உரைக்கிறான்,
தேர் பாகனே நான் அன்று போருக்கு செல்லும் போது என் மனைவி கேட்டால் நெடும்தூரம் போரிங்களா என்று வினாவினாக் இல்லை பக்கம் தான் என்றேன் அத்துடன் கவலை வேண்டாம் உன் தோளில் உள்ள காமத்தை இன்றையே போக்குவேன் என்று இன்றைய தினத்தை கூறியதாக மனதில் நினைத்துக்கொண்டு,
தேர்பாகனே நன்றாக தேரோட்டினாய் காடுகளை கடந்தாய் காடுகளில் இருக்கும் மேட்டுகளை உடைத்தாய் வண்டல் மணல்களில் புதிய பாதைய உண்டாக்கி ஓட்டினாய் இப்படி திறமையான தேரோட்டிய என்று கூறுகிறார் தலைவர்
Comments
Post a Comment