அகநானூறு 84
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே,
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து,
வினைவயின் பெயர்க்கும் தானை,
புனைதார், வேந்தன் பாசறையேமே
உரை:-
போர்க்களத்தில் இருக்கும் முல்லையர்
அழகு ஓவியமாம் வானவில் அதுவோ மலைக்கு மேலை வளைeந்து கிடக்கிறது,
மேகமோ அலைகடலில் புகுந்து நீரை
அருந்தி போர் முரசு போல முழங்கி பெரும் நீரை கீழே தாழ்த்துகிறது, திசை எங்கும் மழையே பொழிகிறது, கண்ணுக்கு நிரம்ப கார்காலம் தோன்றுகிறது,
நெருப்பு பொறி போன்ற கண்களை உருட்டிக்கொண்டு நீரின் சேற்றிலே பன்றி உறங்கும்,அதன் மீது முல்லை பூக்கள் கொட்டி கிடக்கும் முல்லை நிலத்தின் கடைக்கொடியில் ஓர் சிறிய ஊர் இருக்கும், அங்கே தான் ஒளிமிக்க முகத்துடன் அந்த சிற்றூரில் என்னவள் இருப்பாள்,
நெருப்பு பொறி போன்ற கண்களை உருட்டிக்கொண்டு நீரின் சேற்றிலே பன்றி உறங்கும்,அதன் மீது முல்லை பூக்கள் கொட்டி கிடக்கும் முல்லை நிலத்தின் கடைக்கொடியில் ஓர் சிறிய ஊர் இருக்கும், அங்கே தான் ஒளிமிக்க முகத்துடன் அந்த சிற்றூரில் என்னவள் இருப்பாள்
Comments
Post a Comment