அகநானூறு 204
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
கடல் போல் தானை, கலிமா, வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
சென்று, வினை முடித்தனம் ஆயின், இன்றே
2
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், 5
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
3
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை 10
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல்,
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.
பொருள்:-
அரசன் வழுதி குதிரை வீரன். கடல் போல் படை கொண்டவன். தன் வெண்கொற்றக் குடையின் நிழலில் உலகத்தையெல்லாம் காப்பாற்றுபவன். அவன் போரில் வெற்றி பெற்றுவிட்டான். அவனது பாசறையில் இருந்துகொண்டு நாம் ஆற்றிய செயல் முற்றுப்பெற்றுவிட்டது.

இன்றே புறப்படவேண்டும். கார்மழையை எதிர்நோக்கி முல்லை மலர்ந்து மணம் வீசுகிறது. வண்டினம் மொய்க்கிறது. அதோ கார்காலமும் தெரிகிறது.
3
தேர் விரைந்து செல்லட்டும். நெல் அறுப்பவர்கள் தண்ணுமைப் பறை முழக்குவர். அந்த ஓசையைக் கேட்டு சிறுகுடி மலர்ச்சோலையிலுள்ள பறவைகள் பறந்தோடும். சிறுகுடி மலர்ச்சோலைப் பூக்கள் என்னவள் கூந்தலில் கமழ்வதை நான் நுகரவேண்டும். அவள் தோளைத் தழுவிக்கொண்டு நுகரவேண்டும் விரைந்து தேரை ஓட்டுக.
Comments
Post a Comment