அகநானூறு 184
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்!
2
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு 5
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
3
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, 10
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,
4
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் 15
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
5
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே.
பொருள்:-
தோழி தலைவியை வாழ்த்துகிறாள்.
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்!
2
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு 5
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
3
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, 10
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,
4
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் 15
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
5
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே.
பொருள்:-
தோழி தலைவியை வாழ்த்துகிறாள்.
1
இவள் நல்ல மனைவி (நன்னராட்டி). எல்லை கடந்த (கடவுள்) கற்போடு வாழ்கிறாள். தன் குடும்பத்தில் வாழும் குடிமக்களுக்கு விளக்காக திகழும் நல்ல மகனைப் பெற்றுள்ளாள். இவளது கணவன் இல்லம் மீண்டுள்ளான். இது அவளுக்கு மட்டும் இனிமை தரும் நிகழ்வு அன்று. எனக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்வு. “நன்னராட்டியே! உன் வாழ்நாள் சிறக்கட்டும்”.
2
அருவினையாகிய போர்த்தொழில் முடித்த செம்மாந்த உள்ளத்தோடு வந்துள்ளான். முல்லைநிலத்துல் வெண்ணிறப் பிடவம்பூக்கள் மலர்ந்து வண்டுகள் மொய்க்கும் பாதையைக் கடந்து வந்துள்ளான்.
3
குண்டு குண்டாய் இருக்கும் கிளைகளையும், அவற்றில் முள்ளும் கொண்டது கள்ளிப் புதர். அந்தக் கள்ளிப்புதர் புதையும்படி படர்ந்திருந்த முல்லைக்கொடி பூத்துக் குலுங்கி மணம் பரப்பும். அழகிய திருகிய கொம்புகளை உடைய ஆண்மான் அந்த மணத்தை விரும்பாமல், தெளிந்த ஊற்றுநீரைப் பருகிவிட்டு, தன் பெண்மானாகிய புள்ளிமானோடு சேர்ந்து படுத்துக்கொள்ளும்.
4
வெயில் தணிந்து, சிவந்த வானத்தில் பொழுது மறையும் காலம் அது. கையில் கோலும் (கோடு) மண்வெட்டியும் (துளர்) கொண்டு உழைத்த வினைஞர் வீட்டில் காய்ச்சிய கஞ்சிக்கள்ளைப் (அரியல்) பருகிக்கொண்டு மகிழ்ந்திருப்பர்.
5
இப்படிப்பட்ட மாலை வேளையில், கல்லில் பாயும் அருவி ஒலிப்பது போல், தேரில் தொங்கும் மாலைமணி ஒலிக்க, இவள் கணவன் தேரில் வந்து இறங்கினான்.
நன்னராட்டி வாழ்நாள் சிறக்கட்டும்
Comments
Post a Comment