அகநானூறு 144
வருதும்'''' என்ற நாளும் பொய்த்தன;
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா;
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், 5
2
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்'' எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
3
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு,
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல 10
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின்
4
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை,
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி, 15
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின் வயின் இமைப்ப,
அமர் ஓர்த்து, அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.
பொருள்:-
அவள் என் பிரிவை எண்ணும்போதெல்லாம் தோழியிடம் சொல்லிப் புலம்புவாள். என் போர்க்களத்தைப் பற்றிப் பிறர் சொல்லக் கேட்கும்போதெல்லாம் மகிழ்வாள். இவ்வாறு தலைவன் தன் மனைவிவியைப் பற்றி நினைத்துப் பெருமிதம் கொள்கிறான்.
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா;
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், 5
2
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்'' எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
3
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு,
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல 10
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின்
4
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை,
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி, 15
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின் வயின் இமைப்ப,
அமர் ஓர்த்து, அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.
பொருள்:-
அவள் என் பிரிவை எண்ணும்போதெல்லாம் தோழியிடம் சொல்லிப் புலம்புவாள். என் போர்க்களத்தைப் பற்றிப் பிறர் சொல்லக் கேட்கும்போதெல்லாம் மகிழ்வாள். இவ்வாறு தலைவன் தன் மனைவிவியைப் பற்றி நினைத்துப் பெருமிதம் கொள்கிறான்.
1
அவர் திரும்பிவிடுவேன் என்று சொன்ன நாள் வராமையால் பொய்யாகிவிட்டது. அதனால் என் கண்களில் நீர் நிற்காமல் கொட்டுகிறது. கார் காலத்தில் காடெல்லாம் முல்லை பூத்துக் கிடக்கும். அது என் கூந்தலுக்கு வரும். இப்போது அது கூந்தலுக்கு வரவில்லை. இந்த வறுங்கூந்தலை அவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
2
தோழி இதைக் கேள். அவர் அருள் இல்லாதவராக மாறினாலும் மாறட்டும். அறநெறியைப் பற்றிக் கவலைப்படவில்லையே. என்று கொஞ்சம் சொல்லிப் பெரிதும் புலம்புவாள். அப்படிப் புலம்பினாலும்,
3
அவள் மனத்துக்குள்ளே மகிழ்ச்சி கொண்டிருப்பாள். என் மாலை குலையும்படி அவள் என்னைத் தழுவியது போல மகிழ்ச்சி கொள்வாள்.
தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான்.
4
இடி முழங்கும்போதெல்லாம் இங்குப் பாசறையிலுள்ள யானை எதிர் முழக்கம் செய்யும். போரை விரும்பி எழுச்சி கொண்டிருக்கும் இங்குள்ள போர்வீரர்கள் வாளின் கூர்முகம் சிதையும்படி போரிடுவர். அதனால் ஓடும் குருதி மான் நடந்த காலடிகளில் தேங்கி நின்று வானத்து விண்மீன்கள் போல ஆங்காங்கே இமைக்கும். இது என் போர்க்களச் செல்வம். இதனைப் பிறர் சொல்லக் கேட்கும்போதெல்லாம் மகிழ்ச்சி கொள்வாள்.
Comments
Post a Comment