அகநானூறு 134
வானம் வாய்ப்பக் கவினி, கானம்
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் 5
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
2
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த 10
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.
பொருள்:-
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் 5
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
2
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த 10
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.
பொருள்:-
வானம் வாய்த்தது. மழை மேகம் கார் கால மழை பொழிந்தது. நீலமணி நிறத்தில் காயாம் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றிற்கு இடையே செந்நிற மூதாய்ப் பூச்சிகள் மேய்கின்றன. வெள்ளை நிற முல்லைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. முல்லை நிலமே ஓவியன் தீட்டிய வண்ண ஓவியம் போலத் தோன்றுகிறது.
2
வலவ! (தேரோட்டியே) இசைப் பாணி போன்று ஒலிக்கும்படி துள்ளித் தாவும் குதிரைகளைத் தேரில் பூட்டியுள்ளாய். அவற்றை இடித்து ஓட்டாதே. உதிர்ந்து கிடக்கும் வாழைப் பூ போன்ற கொம்புகளை உடைய இரலை ஆண்மான் பருத்த கால்களை உடைய பெண்மானைப் புணர்ந்துகொண்டிருக்கும்போது தேரின் ஒலி கேட்டால் இடையூறு நேருமல்லவா?
Comments
Post a Comment