அகநானூறு 133

அகநானூறு 133 பாடல் முல்லை நிலமு பற்றி

குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,

பொருள்:-
வெள்ளெலி குன்றிமணி போன்ற கண்களையும், குறுகுறுத்த மயிர்களையும், சிறிய கால்களையும், துருத்திக்கொண்டிருக்கும் மோவாயையும் கொண்டது. அது செம்மண் நிலத்தைப் பறித்த புழுதியில் நாள்தோறும் பூக்கும் வேங்கைப் பூக்கள் நல்லழகுடன் கொட்டிக் கிடக்கும். கார் காலத்தில் இப்படித் தோன்றும் முல்லைநிலம் அது.

Comments