அகநானூறு 131
நடுகல் வழிபாடு
அகநானுறு பாடல்
" மழவர்
அகநானுறு பாடல்
" மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் 10
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம்,
பொருள்:-
மழவர்கள் ஆநிரைகளை கவரந்து சென்ற போது அவர்களிடம் போரிட்டு மரணித்தவர்களுக்கு நடுகல் வைத்து அதில் அவர்களின் பெயரும் எழுதப்பட்டிருக்கும் அக்கல்லை வணங்கிவிட்டு செல்லவார்கள் என்பதை குறிக்கிறது
Comments
Post a Comment