அகநானூறு 104

மாலை நேரத்தில் பூச்சூடினான்  தலைவன்

   வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா     5
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
வாங்குசினை பொலிய ஏறி; புதல
2
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
மாழ்கி அன்ன தாழ் பெருஞ் செவிய,  10
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
3
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்  15
ஆய் தொடி அரிவை கூந்தற்
போது குரல் அணிய வேய்தந்தோயே!

      அதாவது முல்லை நிலத்தில் உள்ள ஒரு போர் வீரன் 
வேந்தன் அரசன் ஆனையை ஏற்று  போர் முடித்து  வெற்றி பொருந்திய வேலுனை உடைய வீரர்கள் திரும்புவார்கள்,  அவர்கள் சந்தோசபடுமாறு  தேர்பாகன்  தேரை போட்டி காலில் முள் குத்தினால் கடல் சூழ்ந்தது போல உலகம் வரும் போது ஓடும் வேகம் உடைய குதிரைகளை  கடிவாளத்தை வைத்து நிறுத்தினான் வீரன் முன்பு,

தேனை தேடும் வண்டிகள் நிறைந்த ஆரவாரிக்கும் முல்லை நிலத்தில், புதரில் பூத்துக்கிடக்கும் அவரையில் விதை ஏறாத இளங்காய் போன்று தோன்றும் வயிற்றை உடையவை, பெரிய காதுகளை உடைய வெள்ளாட்டின் வெண்மையான குட்டிகளும், குடும்பி உடைய சிறுவர்களிடம் தப்பி சென்று ஆட்டுக்குட்டிகள் ஆத்தி மரத்தில் இலைஅரும்புகளை கடித்தன அவ் சிற்றூரை கடந்து சென்றான் தலைவன் 

மாலை வேளையில் பலவற்றை எண்ணி கண்ணில் நீர் வடியும்  தன்னையற்று ஆய் தொடியில்  வாடி இருக்கும் அவள் கூந்தலில் மலர்களை சூடினான்,

 இந்த இடத்திலும் புறவின்  என்பது முல்லை நிலமே குறிக்கிறது

Comments