மன்மதன்



தமிழ் வேந்தன் காமன் மகரக்கொடி பாண்டி
இப்பாண்டியனை 
     முல்லை நிலத்தின் கடவுள் கண்ணனின் மகன்,மன்மதன் என்கிற காமன்
இம்மன்மதனின் கோடியே மீன் கொடி அதை பார்க்கலாம்,

மீன் கொடி உடையவன்  மன்மதன்,

    ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,
பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,
மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,
ஏனோன் போல்
(கலி,26,1-4)
இப்பாடல்  கலப்பை படை உடைய பலராமனையும்  சாமனையும்  குறிக்கும்,

பொருள் 
     ஒரு காதில் மட்டும் கலப்பைத் தொங்கலை அணிந்திருக்கும் பரசுராமன் போல மரா மரம் பூத்திருக்கும்.
சூரியன் போலச் செருந்தி பூத்திருக்கும்.
மீன் கொடியை உடைய காமன் நிறம் போன்ற வண்டு மொய்க்கும்படி காஞ்சி பூத்திருக்கும்.
சாமன் நிறத்தில் ஞாழல் பூத்திருக்கும்.

நெய்தல் நிலப்பாடல் இது

 "காமன் கொடி எழுதி,
(கலி-84-24)
பொருள்
இப்பாடல்    பரத்தை ஒருத்தி நெய்தல் நில தலைவனுக்கு அணுவித்தது அதை  கரும்பு வில்லை கொண்டு நாட்டை ஆண்ட காமன் போல்  உன் கணவனின் மார்பில் இருந்து அவனை ஆள்வேன் என்று எச்சரிக்கை குடுப்பது போல காட்டியது,

இம்மன்மதனே பாண்டியன்

 தமிழகத்தில் மூன்று கொடிகள் ஆண்டுள்ளது,
மீன்,வில்,புலி கொடிகள்
இதில் மீன் கொடியே உடையவன்  பாண்டியன்ழ
இங்கே காமனும் அதை கொடியே வைத்துள்ளான்,


மற்றும்

 நாம் சிலப்பதிகாரத்தை நினைவுபடுத்தலாம்,

 பாண்டிய நாட்டில் வாழ்ந்த மாதரி  தன்னோட மகள் ஐயை யிடம்  கூறுகிறார்  கோவில் மணி அடித்துவிட்டது இன்று பால் கலந்து மோர் கடைவது நமக்கான நாள் என்று கூறி கயிற்றே கேட்கிறார் மாதரி அதை  காணலாம்,

கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும் வில்லும்
நாவலந்தண் பொழின்மன்னர்
ஏவல்கேட்பப் பார்அரசாண்ட
மாலைவெண்குடைப் பாண்டியன் கோயிலுட்
காலைமுரசம் கனைகுரல் இயம்புமாதலின்
நெய்ம்முறை நமக்கின்றாகுமென
ஐயைதன் மகளைக்கூஉய்க்
கடைகயிறு மத்துங்கொண்
டிடைமுதுமகள் வந்துதோன்றுமன். "

என்ற பாடல் கூறுகிறது,
இந்த வழக்கம் தொன்று தொட்டு வந்துள்ளதை  என்பதை இந்த பாடல் வரிகள் மூலம் தெரிகிறது,

நெடியோன் மகன் காமன்
நெடியோன் என்பது மாயவன் தான் அவனோட மகன்  காமன்

பூ அல்ல; பூளை, உழிஞையோடு, யாத்த
புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, 
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி:
நெடியோன் மகன் நயந்து தந்து, ஆங்கு அனைய

கலிதொகை(140-4,9)

பொருள்
நான் அணிந்திருப்பது எல்லாரும் சூடிக்கொள்வது போன்ற பூக்கள் அல்ல. பூளை, உழிஞை, மயில் பீலி, மணி, ஆவாரம்பூ ஆகியவற்றை நூலில் கோத்து அணிந்துகொண்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் நெடியோன் எனப் போற்றப்படும் திருமாலின் மகன் காமன் எனக்குத் தந்திருக்கிறான்.

 அடுத்து

சிவகங்கை அரசர்களின் திருநாமங்களாக செப்பேட்டில்:

கவுரி வல்லபத் தேவர்
குளந்தை நகராதிபன்
அரசு நிலையிட்டான்
சசிவர்ணத் தேவர்
முத்து விஜய ரகுநாதன்
பெரிய உடையார்
இந்துகுல சர்ப்ப கருடன்(சந்திரகுல சரப்பபக்ஷி[DRAGON])
அனுமக் கொடி கருடக்கொடி மகரக்கொடி புலிக்கொடி
சிங்கக் கொடி யாளிக்கொடியுடையோன்
பாண்டிய தேசத்தில் பொதியமாமலையான்
வைகையாருடையான்
புனல் பரளை நாடன்
கரந்தை நகராதிபன்
முத்து வடுக நாதன்
மும்மதயானையன்
பஞ்சகால பயங்கரன்
பஞ்சகதி புரவியுடையான்
அரசு ராவணவத ராமன்,

மகரகொடி என்னும் மீன் கொடி பற்றியும் உள்ளது,


 நாம் சிலப்பதிகாரத்தை நினைவுபடுத்தலாம்,

 பாண்டிய நாட்டில் வாழ்ந்த மாதரி  தன்னோட மகள் ஐயை யிடம்  கூறுகிறார்  கோவில் மணி அடித்துவிட்டது இன்று பால் கலந்து மோர் கடைவது நமக்கான நாள் என்று கூறி கயிற்றே கேட்கிறார் மாதரி அதை  காணலாம்,

கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும் வில்லும்
நாவலந்தண் பொழின்மன்னர்
ஏவல்கேட்பப் பார்அரசாண்ட
மாலைவெண்குடைப் பாண்டியன் கோயிலுட்
காலைமுரசம் கனைகுரல் இயம்புமாதலின்
நெய்ம்முறை நமக்கின்றாகுமென
ஐயைதன் மகளைக்கூஉய்க்
கடைகயிறு மத்துங்கொண்
டிடைமுதுமகள் வந்துதோன்றுமன். "

என்ற பாடல் கூறுகிறது,
இந்த வழக்கம் தொன்று தொட்டு வந்துள்ளதை  என்பதை இந்த பாடல் வரிகள் மூலம் தெரிகிறது,


அடுத்து

காமன் என்னும் மன்மதன் அம்புகள் பற்றிய
மன்மதனின் அம்பிலுள்ள ஐந்து மலர்கள்,தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம்.


" விரை மலர் அம்பினோன்
போல்,ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,
(பரி 22,26-27)

விரைமலர் எய்யும் காமன் போலவும், வீரக்கழல் அணிந்த மைந்தர் சென்றனர்,

என்றும் பாடப்பட்டுள்ளது,

 அடுத்து

எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்.

பொருள்;-

அவனது அம்பலத்தில் காமவேள் காம மலரம்புகளை எய்கிறான்,

அடுத்து

எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்.

பொருள்;-

அவனது அம்பலத்தில் காமவேள் காம மலரம்புகளை எய்கிறான்,

அடுத்து

வென்றி மதவேடன்வில்லெடுப்ப, வீதியெல்லாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர,  நின்ற
தளவேனல் மீதலருந் தாழ்வரைசூழ் நாடற்கு
தளவேனல் வந்த தெதீர்.

(நளவெண்பா)
     முல்லை நிலத்தின்கண் வளர்ந்த முல்லைக்கொடி படர்ந்து குறிஞ்சி நிலத்தின்கண் வளர்ந்துள்ள தினைத்தட்டையின் மீது மலர்கள் பூக்கின்ற மலைச்சாரல் சூழ்ந்த நிடத நாட்டு மன்னனாகிய நளனுக்கு எதிரில் மன்மதன் தனது வெற்றி மிக்க கரும்பு வில்லைத் தாங்கி வரவும் தென்றல் வீதி எல்லாம் மது நீரை தெளித்துக்கொண்டு வரவும் இளவேனிற்பருவம் வந்துற்றது.

அடுத்து

பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்
ஆவியார் போனாலும் அவ்வழியே – பாவியேன்
ஆசைபோ காதெ’ன் றழிந்தாள் அணியாழின்
ஓசைபோற் சொல்லாள் உயிர்த்து.

அழகிய யாழிசை போன்ற இனிய சொல்லையுடைய தமயந்தியானவள், ‘ மன்மதனுடைய மலர் அம்புகள் என் உடலில் பாய்ந்த துவரத்தின் வழியே என் உயிர் சென்று விட்டாலும் , அது போனவழியே ( நளன்பாலுள்ள ) பாவியான என் ஆசை மாத்திரம் போகாது!’ என்று கூறிப் பெருமூச்சு விட்டு அறிவு மயங்கினாள்.

அடுத்து

சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்
தாமுள் ளுறைபுகுதத் தார்வண்டு – காமன்றன்
பூவாளி ஐந்திற் புகத்துயில் புக்கத்தே
ஓவாது முந்நீர் உலகு.

( தீம்பாலின் = இனிமை பொருந்திய துறையினையுடைய , செவ்வழி = ஒரு பண், பூ வாளி ஐந்தில் = ( தாமரை , அசோகு, மா, முல்லை, கருங்குவளை எனும்) மலரம்புகளாகிய ஐந்தில் , ஓவாது = இடையறாமல் )

களிறுகள் தாம் கட்டப்படும் இடத்திற்குச்c கெல்லவும், இனிமை பொருந்திய துறையினையுடைய செவ்வழி என்னும் பண்ணை இசைக்கின்ற யாழ் எனும் இசைக்கருவிகள் தங்கள் உறைகளுக்குள் நுழையவும், மலர் மாலைகளில் மொய்க்கின்ற வண்டுகள் மன்மதனுக்குரியனவான ஐவகை மலரம்பின் உள்ளே புகுந்து துயிலவும், கடலால் சூழப்பெற்ற உயிர்கள் எல்லாம் இடையறாது நன்கு தூங்கின.

அடுத்து

செந்தேன் மொழியாள் செறியளாக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார் – வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்.’

( செறி = நெருங்கிய , பொரு வெஞ்சிலை = போர் செய்கின்ற கொடிய வில், அளகம் = கூந்தல், இந்து = நிலவு, பூவாளி = பூவாகிய அம்பு )

‘பூவாகிய அம்பினையுடைய மன்மதன் எக்காலத்தும் வந்து போர் செய்கின்ற கொடிய வில்லைப் பொருந்த வைத்து, அம்பின் வரிசைகளைத் தீட்டிக் கூர்மை செய்யும் இடம், நல்ல தேன் போன்ற இனிய சொற்களையுடைய தமையந்தியின் நெருங்கிய முன்னுள்ள கூந்தல் வரிசையின் பக்கத்திலுள்ள பிறைத்துண்டாகிய நெற்றி என்று கூறுவர் புலவர்

அடுத்து

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமவள்தன்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள்; காமன்
படைகற்பான் வந்தடைந்தான்; பைந்தொடியாள் பாத
நடைகற்பான் வந்தடைந்தோம் நாம்.

( பூ மனை வாய் = பூவாகிய மாளிகையில், புட்குலங்கள் = பறவைக்குலங்கள், பைந்தொடியாள்= பசுமையான வலைகளை அணிந்த தமயந்தி )

‘மன்மதன் தமயந்தி தன் விழியாகிய அம்பு எய்வதைக் கண்டு அம்பெய்திப் பழகிக்கொள்ள அங்கு வந்து சேர்ந்தான்; யாங்கள் பசுமையான வளையலை அணிந்த தமயந்தியின் நடையைக் கற்பதற்காக வந்து சேர்ந்தோம்; யாங்கள் ‘மலர்’ என்னும் மாளிகையில் வாழ்கின்ற மயிலினது கூட்டத்தைப் போன்ற தோழிப் பெண்கள் என்று எங்களைக் கண்டோர் கூறும்படி அவளுடன் பழக்கம் கொண்டுள்ளோம்!’

( அன்னம் இவ்வாறு கூறுவதால் நளன் காதலை உரைத்தற்குத் தகுதி உடையதே அன்னம் என்னும் குறிப்பையும் ஆசிரியர் உணர்த்துகின்றார்.

இந்த காமன் ஆயன் பற்றி 
திருக்குறள் 
காமத்துபாலில்  காணலாம்


  பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197) பாடல்

பொருள்:-  காமதேவன், காதலர் இருவர் இடையேயும் இருந்து இயங்காது, ஒருவர் பக்கத்திலேயே இருந்து செயல்படுவதால், அவன் என்னுடைய வருத்தத்தையும் தடுமாற்றத்தையும், உணரமாட்டான் போலும்!

அடுத்தாக
குறல் 1228 ல்
  ஒரு பாடல் சுட்டிக்காட்டியுள்ளார்,


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை
(1228)

பொருள்;-
   முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப்ஙண பொழுதிற்கு் தூதானது மட்டும்  அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது,

அடுத்து

காமன் பற்றிய தமிழ் பாடல்கள்

இப்பாடல் முல்லைக்கலியின் ஆய்ச்சி  தயிர்,மோர் விற்கும் போது,


" கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு,
(கலி108-4)
 பொருள்;-
 அழகின் தெய்வமாகிய காமன் தன்னோட படையுடன் அம்பை விடும் அழகுடன் வருவது போல தெரிகிறது என்று கூறுகிறாருகள்,

அடுத்து

இப்பாடல் முல்லை நில ஆய்ச்சியின் அழகை வர்ணிக்கும் ஆயன்,

 "காமன் மடை அடும்,

பொருள்:-
 இடைச்சி வரம் அழகை பார்க்குமு போது
திருமளும் இரதியும் அவர்கள் அழகை இவளிடம் குடுத்துருப்பார்கள் போல , இவள் கோவிலுக்கு பால் குடுக்கா வருவாயினேன் காமனும் விழித்துருப்பான் 
என்று ஆயமகள் அழகை பாடும் போது 
காமனும் அவனின் துனைவியும் புகழப்படுகிறார்கள்,

அடுத்து


கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:

பொருள்;-
சிலர் சிலருக்கு வேடிக்கை காட்டினர். கண்டவர் உள்ளத்தைத் தாக்கும் கட்டழகியைப் பாருங்கள். பல அணிகலன்கள்  பூண்டு காமனின் பூப் படை போல விளங்கும் பூமகளைப் பாருங்கள்.


அடித்து

எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்.
(பரி 18-28)
பொருளு:-
அடர்ந்த இருளைக் கொடிமின்னல் கிழிக்கிறது. வெண்ணிறம் சுடரும் வேலை உடையவன் வேளன் (முருகன்). அவன் மலையில் தோன்றும் ஞாயிறு நெற்றியில் ஓடை கட்டியிருக்கும் அவன் களிறு போல் தோன்றுகிறது. அவனது இல்லத்தில் காமவேள் காம மலரம்புகளை எய்கிறான்.

காமன் மற்றும் மன்மதன் பற்றிய பாடல்

இப்பாடல் மாயோன் மகன்க மன்மதன் மற்றும் சாமன் பற்றி வருகிறது,

காமன் அழகில் சிறந்தவன் என்றும் சாமன் அழகில்லாதவன் என்றும்,

யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி,
யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண்' 'கவர் கணைச்
சாமனார் தம்முன் செலவு காண்'

நான் விரும்பவில்லை என்று சொல்கிறேன். ஆமையைத் தூக்கி நிறுத்தியது போலக் குறளன் தன் தோள்களை வீசிக்கொண்டு  நான் விலக்கினாலும் விலகாமல் தன் காம நடை போட்டுக்கொண்டு வருகிறான். அழகே இல்லாத சாமனார் போலக் குறளன் நடந்து வருகிறான்,

அடுத்து

பாலைநிலத்தின் பாடல் ஒன்றில்

தலைவன் வருகையி உருதி செய்யும்  தோழி


நடுக்கம் செய் பொழுதாயின்,
காமவேள் விழவாயின், 'கலங்குவள் பெரிது' என,


பொருள்;-
மனதே நொருங்க வேண்டாம்  காமவேள் திருவிழாவின் போது தான் இல்லாவிட்டால் தலைவி பயந்தில் நடுங்குவாள் என்று உனது தலைவனுக்கு தெரியும்,ஆகையால் விரைந்து வந்துவிடுவார் என்று கூறுப்படுகிறது,

அடுத்து

அகநானூறு (பாடல் 181)

நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்

ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய

பொய்கைசூழ்ந்த பொழில்மனைமகளிர்

கைசெய்பாவைத் துறைக்கண் இறுக்கும்

மகரநெற்றி வாந்தோய் புரிசைச்

சிகரம் தோன்றா சேணுயர் நல் இல்

பொருள்:-

பழமையான நான்கு வேதங்களை அருளிய முக்கண்ணனின் ஆலமுற்றம் என்னும் இடத்திலே, அழகாக அமைந்த பொய்கைகள் சூழ்ந்த பூங்காவில், சிறு வீடுகட்டி விளையாடும் சிறுமியர் செய்த மண்பாவைகள் (பொம்மைகள்) இருக்கும் துறையில் மகரக்கொடியை மதில் உச்சியில் கொண்ட மிக உயர்ந்த மாடங்களை உடைய அரண்மனைகளையுடைய புகார் நகரம்

அடுத்து

காடும் அகன்ற சோலைகளும் மன்மதனுக்கு ஆயுதச்சாலைகள் ; வான வெளி மன்மதனுக்குத் தேரோடும் வீதி; அலைகள் மடிந்து விழும் கடல், அவன் மீன் வடிவு பொறித்த துகிற்கொடி; இவ்வுலகம் முழுவதும் அவனுக்கு வில்வன்மை காட்டும் இடமாகும்; இங்ஙனம் இருக்க, சிவபெருமான் அவனைக் கொன்றது ( தன் நெற்றிக் கண்ணால் எரித்தான் என்று கூறுகிறார்களே, அது ) , முழுவதும் பொய்யே ஆகும்! அவன் அழிந்திருப்பின், இவைகளைக் காண முடியாதன்றோ?

‘காதலால் வருந்துகிற தமந்தி வருந்தக் காரணம் அந்தக் காமனே அல்லனோ! அவன் எரிக்கப் பெற்றது உண்மையாயின், இவ்வருத்தம் ஏன் ஏற்படப்போகிறது ?’ என்பது கருத்து. சிவபெருமான் மன்மதனை எரித்தார் என்பது புராணக் கதை.

Comments